சி.பி.ஐ.யால் தேடப்படும் நீரவ் மோடி - இங்கிலாந்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டது
பதிவு: ஆகஸ்ட் 20, 2018, 03:04 PM
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 12 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல தொழிலதிபர் நீரவ் மோடி தற்போது தலைமறைவாக உள்ளார்.6க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட்டுகளை வைத்துள்ள அவர் வெளிநாட்டில் தங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில்,சர்வதேச போலீஸார் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.இந்நிலையில்,நீரவ் மோடி,இங்கிலாந்தில் தங்கி இருப்பதை அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாகத் தகவல்  வெளியாகி உள்ளது.அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கச் செய்வதற்காக நடவடிக்கைகளை எடுத்துவருவதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.