கொட்டும் மழையில் கர்ப்பிணியை பிரசவத்திற்கு தூக்கி சென்ற ராணுவ வீரர்கள்

சட்டீஸ்கர் மாநிலம் கொண்டகான் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.

Update: 2018-08-13 11:01 GMT
சட்டீஸ்கர் மாநிலம் கொண்டகான் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்கள்  வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.  இந்நிலையில், ஹதேலி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அங்கு ஆம்புலன்ஸ் செல்ல முடியாத அளவுக்கு கனமழை பெய்ததை அடுத்து, அங்கு விரைந்த இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், 4 கிலோ மீட்டர் தூரம் ஸ்டெட்சரிலேயே அவரை தூக்கிச் சென்றனர். இதன்பின்னர் அங்கிருந்து, மர்தாபால் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்