மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு
பதிவு: ஜூலை 25, 2018, 05:48 PM
* டெல்லியில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை, தமிழக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர் சந்தித்து பேசினர். 

* நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையின் அறையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலக்கரியின் அளவை அதிகரிக்க வேண்டும் என பியூஷ் கோயலிடம் தமிழக அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர்.