சபரிமலையில் ஆண்கள் அனுமதிக்கப்படும் போது பெண்களை அனுமதிக்காமல் இருப்பதற்கு இந்திய அரசியல் சாசனம் இடம் அளிக்கிறதா? - உச்சநீதிமன்றம் கேள்வி

சபரிமலை கோயிலில், பெண்கள் அனுமதிக்கப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2018-07-18 13:43 GMT
சபரிமலை கோயிலில், பெண்கள்  அனுமதிக்கப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படாததை எதிர்த்து,  இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம், உச்ச நீதிமன்றத்தில்  பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, பாலினத்தை முன்வைத்து ஒருபிரிவை மட்டும் தடை செய்வது, அரசியல் சாசனத்திற்கு எதிராக இருக்கிறதா எனக் கேள்வி எழுப்பியதோடு, இது குறித்து, உச்ச நீதிமன்ற அரசியல் அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கும் என ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்த வழக்கு விசாரணையை தொடங்கியுள்ளது. அப்போது, கேரள அரசு சார்பில், பெண்களும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஒரு இடத்தில் ஆண்களை அனுமதிக்கும் போது, பெண்களை மட்டும் அனுமதிக்காமல் இருப்பதை இந்திய அரசியல் சட்டம் அனுமதிக்கிறதா என விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியது. 
Tags:    

மேலும் செய்திகள்