பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - பேருந்தில் பயணம் செய்த 47 பேர் பலி
பதிவு: ஜூலை 01, 2018, 08:01 PM
உத்தரகண்ட் மாநிலம் பவுரி கார்வால் மாவட்டத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 47 பேர் பலியானார்கள். விபத்துக்குள்ளான பேருந்தில் பயணம் செய்த 11 பேர், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.