சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் மறுசுழற்சி மையம்
4 இடங்களில் தினமும் 5,000 பாட்டில்கள் மறுசூழற்சி - தென் மத்திய ரயில்வே நடவடிக்கை;
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பாட்டீல்களை மறுசுழற்சி செய்யும் மையத்தை தெற்கு மத்திய ரயில்வே ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே நிலையங்கள், இருப்புப் பாதையோரம் பயணிகளால் விட்டுச் செல்லப்படும் பிளாஸ்டிக் பாட்டீல்களை சேகரித்து, நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பாட்டில்களை மறுசுழற்சி செய்ய திட்டமிட்டு உள்ளதாக தெற்கு மத்திய ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் உமாசங்கர் தெரிவித்துள்ளார்.
இதற்காக கச்சிகுடா, செகந்திரபாத், நிசாமாபாத் மற்றும் விஜயவாடாவில் மறுசுழற்சி மையங்கள் அமைக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.