9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு நடைபெற இருந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
பதிவு: ஜூன் 22, 2018, 08:31 AM
நன்னிலத்தை  அடுத்துள்ள வாழ்க்கை கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவருக்கு முதல் மனைவி இறந்ததையடுத்து, இரண்டாவதாக அச்சுதமங்கலத்தை சேர்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்துள்ளது. இது குறித்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர்  திருமணத்தை தடுத்து நிறுத்தினார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு குழு ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய ஆலோசனைகள் வழங்கினர். பின்னர் மாணவி தொடர்ந்து படிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.