கேரள: திருநங்கைகளுக்கான அழகி போட்டியை தொடங்கி வைத்தார் நடிகர் மம்முட்டி
பதிவு: ஜூன் 19, 2018, 05:45 PM
கேரள மாநிலம் கொச்சி நகரில் திருநங்கைகளுக்கான அழகி போட்டி நடைபெற்றது. நடிகர் மம்முட்டி குத்துவிளக்கு ஏற்றி, போட்டியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக திருநங்கைகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. அழகு போட்டியில் கோட்டயம் பகுதியை சேர்ந்த ஸ்மிருதி முதலிடத்தையும், திருவனந்தபுரத்தை சேர்ந்த சரா மற்றும் ஸ்ரீமயி ஆகியோர் 2-வது இடத்தை பிடித்தனர்.