நீர் ஆவி ஆவதை தடுக்கவும், மின்சாரம் தயாரிக்கவும் மிதக்கும் சோலார் தகடுகள் திட்டம் கொண்டு வரப்படும் - தமிழக அரசு

நீர்நிலைகளில் உள்ள தண்ணீர் ஆவியாகாமல் தடுக்கவும், மின்சாரம் தயாரிக்கவும் தமிழக அரசு ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

Update: 2018-06-13 04:45 GMT
நீர்நிலைகளில் உள்ள தண்ணீர் ஆவியாகாமல் தடுக்கவும், மின்சாரம் தயாரிக்கவும் தமிழக அரசு ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

ஆம்,  குஜராத், கேரளாவை தொடர்ந்து, தமிழகத்திலும் வருகிறது. தண்ணீர் ஆவியாவதை தடுப்பது ஒரு புறம் என்றால், மேலே உள்ள சூரிய சக்தி தகடுகள் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.. குஜராத்தில் நர்மதா ஆற்றின் கிளை கால்வாய் மேலே சோலார் தகடுகள் மூலம் ஆண்டுக்கு 16 லட்சம் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படுவது மட்டுமல்லாமல், ஆண்டொன்றிற்கு 90 லட்சம் லிட்டர் தண்ணீர் ஆவியாகாமல் தடுக்கப்படுகிறது... ஒரு மெகாவாட் திறன் கொண்ட சோலார் தகடுகளை அமைக்க, 2012ல் 17 கோடி செலவு செய்தது குஜராத் அரசு... 

அண்மையில், கேரளாவில்,  மிதக்கும் சோலார் தகடுகள் வயநாடு பகுதியில் நிறுவனப்பட்டுள்ளன.  500 கிலோவாட் மின்சாரம் தயாரிக்கும் இந்த சோலார் தகடுகள், ஒன்றேகால் ஏக்கரில் மிதக்கவிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் ஆயிரத்து 938 சோலார் தகடுகள் உள்ளன.. இதன் செலவு என்ன தெரியுமா? ஒன்பதேகால் கோடி ரூபாய்... போடப்பட்ட திட்டம் என்னவோ 10 கிலோவாட் மின்சாரம் தயாரிக்க தான்.. ஆனால்  தற்போது 500 கிலோவாட்டில் வந்து நிற்கிறது... இதை கொண்டு வருடத்திற்கு ஏழரை லட்சம் யூனிட் மின்சாரம் தயாரிக்கிறார்களாம்..

தற்போது  தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் மற்றும் இந்திய சூரிய சக்தி கழகம் இணைந்து, ஆயிரத்து 25 கோடி ரூபாய் செலவில், நதிகளில் நீர் ஆவி ஆவதை தடுக்கவும்,  250 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கவும் மிதக்கும் சோலார் தகடுகள் திட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்