ரமலான் மாதத்தையொட்டி ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தம் - பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்

ரமலான் மாதத்தையொட்டி ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தம் - பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Update: 2018-06-05 12:39 GMT
ரமலான் மாதத்தையொட்டி ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  சண்டை நிறுத்தம் இருக்கும் போது, பாகிஸ்தான் தரப்பில் தாக்குதல் நடத்தப்பட்டால் பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு உரிமை உள்ளது எனகூறினார். சண்டை நிறுத்தத்தை இந்தியா மதிப்பதாகவும் ஆனால் எதற்கும் ஒரு வரைமுறை உள்ளது என்றும் அவர்  குறிப்பிட்டார். தீவிரவாத தாக்குதலை நடத்திக் கொண்டே பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்பதை பாகிஸ்தான் உணர வேண்டும் என நிர்மலா சீதாராமன் கூறினார். இந்திய ராணுவத்தில் வெடிமருந்து பற்றாக்குறை எதுவும் இல்லை என்றும்  அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்