வரும் 2022-க்குள் அனைவருக்கும் வீடு என்பதை உறுதி - பிரதமர் நரேந்திர மோடி

வரும் 2022-க்குள் அனைவருக்கும் வீடு என்பதை உறுதி செய்ய தமது அரசு கடுமையாக உழைத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2018-06-05 06:49 GMT
பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்ட பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி காட்சி மூலம் உரையாடினார்.  பயனாளிகளுடன் அரசு திட்டங்கள் குறித்து கேட்டறிவது உண்மையிலேயே மகிழ்ச்சியான ஒன்று என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஒரு திட்டத்தின் பல்வேறு நிலைகளை தெரிந்து கொள்வதுடன், எந்த இடத்தில் திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ள உதவுவதாக அவர் கூறினார். எல்லா மனிதனுக்கும் சொந்த வீடு வேண்டும் என்பது விருப்பமாக உள்ளதாகவும், அது கிடைக்கும் போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்த திட்டம் வெறும் செங்கல் மற்றும் கட்டுமானம் அல்ல, தரமான வாழ்க்கையையும், கனவையும் நனவாக்கும் ஒன்று என பெருமிதத்துடன் நரேந்திர மோடி குறிப்பிட்டார். வீட்டு வசதி துறைக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர், வரும் 2022-ல் 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் தரூணத்தில், அனைவருக்கும் வீடு திட்டத்தை உறுதிப்படுத்த தமது அரசு உழைத்து வருவதாக சுட்டிக்காட்டினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் என்ற அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார். தற்போது சமூக, பொருளாதார, சாதி வாரி கணக்கெடுப்பு மூலமாக பயனாளிகள் தேர்வு செய்யப்படுவதால், முன்பு விடுபட்டவர்களுக்கு கூட தற்போது பலன் அடைவார்கள் என பிரதமர் தெரிவித்தார்
Tags:    

மேலும் செய்திகள்