புனித் ராஜ்குமாருக்கு முழு அரசு மரியாதை - நீண்ட வரிசையில் காத்திருந்து ரசிகர்கள் அஞ்சலி

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடலுக்கு கர்நாடகா அரசு சார்பில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.;

Update: 2021-10-31 09:34 GMT
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடலுக்கு கர்நாடகா அரசு சார்பில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் திடீர் மாரடைப்பு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று மரணமடைந்தார். அவரது இந்த திடீர் மரணம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்தையும் அவரது  ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், கன்டீரவா மைதானத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு கொட்டும் மழையையும், குளிரையும் பொருட்படுத்தாமல் இன்று அதிகாலை 4 மணி வரை  நீண்ட வரிசையில் காத்திருந்து அவரது ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். பிறகு அங்கிருந்து கன்டீரவா ஸ்டூடியோவிற்கு கொண்டு வரப்பட்ட புனித் ராஜ்குமாரின் உடலுக்கு, கர்நாடகா அரசு சார்பில் அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் தேசிய கொடி போர்த்தி, முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து, தந்தை ராஜ்குமாரின் கல்லறை அருகே புனித் ராஜ்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்