1000 நாட்களுக்கு பின் நடிப்பு - மீண்டும் படப்பிடிப்பில் கமல்ஹாசன்
நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமா படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசன் கலந்துக்கொண்டுள்ளார். கமல்ஹாசன் நடிப்பில் படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அவர் நடிக்கும் விக்ரம் படத்தை வைத்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.;
நீண்ட இடைவெளிக்கு முற்றுப்புள்ளி
கமல்ஹாசன் படமின்றி 1000 நாட்கள்
"ஸ்கூல் ரியூனியன் போன்று உள்ளது"
முதல் நாள் சூட்டிங் பற்றி நெகிழ்ந்த கமல்
நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமா படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசன் கலந்துக்கொண்டுள்ளார். கமல்ஹாசன் நடிப்பில் படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அவர் நடிக்கும் விக்ரம் படத்தை வைத்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
அரசியலுக்கு சென்றுவிட்டார். இனி திரையில் பார்க்க முடியுமா என ஏங்கிக்கொண்டிருந்தனர் ரசிகர்கள்...
இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தம் மேலும் ஏமாற்றம் அடைய வைக்க, அரசியலுக்கு பிறகும் நடிப்பேன் எனக்கூறி ஆறுதல்படுத்தியவர், தற்போது விக்ரம் படத்தின் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார் கமல்ஹாசன்...
பள்ளியில் படித்தவர்களை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பது போன்று ஒரு தருணம்.. 50 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் படப்பிடிப்பிற்கு இவ்வளவு இடைவெளி இருந்தது இல்லை எனக்கூறி முதல் நாள் சூட்டிங் காட்சிகளை பகிர்ந்து நெகிழ்ச்சி அடைந்துள்ளார் கமல்..
இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தம், தீவிர அரசியல் போன்ற பல காரணங்கள் அவரது நடிப்பிற்கு முட்டுக்கட்டை போட, விக்ரம் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார்.கமல்... விஸ்வரூபம் 2 படம் வெளியாகி ஆயிரம் நாட்கள் கடந்துவிட்ட நிலையில், அடுத்ததாக எப்போது மீண்டும் திரையில் பார்ப்போம் என்ற ஏக்கத்தில் தனது ரசிகர்களை காக்க வைத்துள்ளார் கமல்..
இந்த நீண்ட இடைவெளி விக்ரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்ய, கமலின் தீவிர ரசிகர் எனக்கூறி சினிமாவில் ஜொலித்து வரும் லோகேஷ் கனகராஜ், விக்ரம் படத்தை இயக்குவது கூடுதல் சிறப்பு...
விஜய், விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய மாஸ்டர் படத்தை வெற்றிபடமாக்கிய லோகேஷ், தற்போது கமல்ஹாசன் என்ற Encyclopedia-வுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் போன்ற நவரச நாயகர்களை இணைத்து படத்தை பிரம்மாண்டமாக்கிவிட்டார்.
பழைய விக்ரம் திரைப்படம் மூலம் 80களில் இருந்த இளசுகளை கொண்டாட வைத்த கமல்ஹாசன், புதிய விக்ரம் மூலம் 2K கிட்ஸை துள்ளிக்குதிக்க வைக்க தற்போது ஆயத்தமாகிவிட்டார்