அமீர் கான் - கிரண் ராவ் தம்பதி விவாகரத்து... முடிவுக்கு வந்த 15 ஆண்டு கால இல்வாழ்க்கை
பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் - கிரண் ராவ் தம்பதி விவாகரத்து செய்துள்ளனர். 15 ஆண்டு கால வாழ்க்கை முடிவுக்கு வந்திருப்பதாக இருவரும் அறிவித்துள்ளனர்.;
பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் - கிரண் ராவ் தம்பதி விவாகரத்து செய்துள்ளனர். 15 ஆண்டு கால வாழ்க்கை முடிவுக்கு வந்திருப்பதாக இருவரும் அறிவித்துள்ளனர்.
பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருப்பவர் அமீர் கான்.. காதல் படமோ, நல்ல கதையம்சம் கொண்ட படமோ, எதுவாயினும் நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை வென்றவர் அமீர். லகான் படத்தின் மூலம் இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் ரசிகர்களிடம் சென்று சேர்ந்த அமீர் கான், அந்த படத்தின் மூலமே தனது வாழ்க்கை துணையையும் தேர்ந்தெடுத்தார்.
லகான் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த கிரண் ராவை காதலித்து மணமுடித்தார் அமீர். 15 ஆண்டுகாலம் சேர்ந்து வாழ்ந்து வந்த ஜோடி, பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்வதாக அறிவித்து பாலிவுட் உலகில் பேசுபொருளாகிவிட்டனர்..
15 ஆண்டுகள்... மகிழ்ச்சியை பகிர்ந்தும், நம்பிக்கையுடனும் அழகிய வாழ்க்கையை வாழ்ந்தோம்.. இருவரது சொந்த வாழ்க்கையை கருத்தில் கொண்டு பிரிகிறோம். எனினும் தங்களது மகனுக்காக பெற்றோராக இணைந்திருப்போம் என நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர் அமீர் கான் - கிரண் ராவ் ஜோடி...
1986ஆம் ஆண்டு ரீனா தட்டாவை மணமுடித்த அமீர் கானுக்கு மகன், மகள் பிறந்த நிலையில் 2002ஆம் ஆண்டு விவாகரத்துக்கு பின் தாயுடன் குழந்தைகள் சென்றனர். பின்னர் கிரண் ராவை காதலித்து மணமுடித்த அமீர்கான், 15 ஆண்டு இல்வாழ்க்கைக்கு பிறகு பிரிவதாக அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே விவாகரத்து செய்ய இருவரும் ஆலோசித்திருந்ததாகவும், அதற்கான நேரம் வந்துவிட்டது என கருதிய பின் இறுதி முடிவை எடுத்துள்ளதாக கூறி குடும்பத்தினர், நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர் அமீர்கான் - கிரண் ராவ் ஜோடி..