எஸ்.பி.பி. உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - மருத்துவமனை அறிக்கை

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.;

Update: 2020-08-20 16:28 GMT
பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எக்மோ சிகிச்சையும் தொடர்வதாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ்.பி.பி உடல் நலம் பெற வேண்டி தமிழகம் முழுவதும் கூட்டு பிரார்த்தனை


ரசிகர்களின் மனம் கவர்ந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், அனைவரும் கூட்டு பிரார்த்தனை நடத்த இயக்குநர் பாரதிராஜா அழைப்பு விடுத்தார். இதன்படி இன்று மாலை 6 மணியளவில் திரை உலகினர், இசை கலைஞர்கள், பொதுமக்கள் தமிழகம் முழுவதும் திராளக திரண்டு எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் பெற பிரார்த்தனை செய்தனர். 


எஸ்.பி.பி. நலம் பெற்று திரும்ப வேண்டும் கவிஞர் வைரமுத்து 


பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பூரண உடல் நலம் பெற திரையுலகினரும், இசைத்துறையை சேர்ந்தவர்களும் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பிரபல கவிஞர் வைரமுத்து, மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டும் என, வாழ்த்தி, அவர் பாடிய பாடலை ஒலிக்க விட்டார். 


எஸ்.பி.பி. உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை
எஸ்.பி.பி.சரண்

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை என, அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ள சரண், தமது தந்தை மீண்டு வருவார் என, நம்பிக்கை கொண்டுள்ளதாக கூறியுள்ளார். எஸ்.பி.பியின் உடல்நலத்திற்காக கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட திரையுலகிற்கும், இசையுலகிற்கும் எஸ்.பி.பி.சரண் நன்றி கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்