"ரஜினி, அஜித் விஜய் தாங்களாகவே சம்பளத்தை குறைப்பர்" - சம்பள குறைப்பு பற்றி கேள்விக்கு செல்வமணி பதில்
சின்னத்திரை படப்பிடிப்பிற்கு குறைந்தபட்சம் 40 நபர்கள் பணியாற்ற அரசு அனுமதிக்க வேண்டும் என ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.;
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர் கே செல்வமணி சென்னை வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தொழில்துறைக்கு கிடைக்கக் கூடிய எவ்விதமான உதவிகளும் தயாரிப்பாளர்களுக்கோ தொழிலாளர்களுக்கோ கிடைப்பதில்லை என்றார். சினிமாவை தொழில்துறை என்று அரசு கூறுவதால் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கிடைக்கக் கூடிய வீடு உள்ளிட்ட சலுகைகளும் கிடைப்பதில்லை என்றும், இதற்கு மத்திய மாநில அரசு ஆவண செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். சின்னத்திரை படப்பிடிப்பிற்கு குறைந்தபட்சம் 40 நபர்கள் தேவைப்படும் என்பதால் அரசு சார்பில் 20 பேர் அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பை 40 ஆக உயர்த்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தார். தற்போது தமிழ்திரைத்துறை முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித், விஜய் ஆகியோர் தாங்களாக தங்களது சம்பளத்தை குறைத்து கொள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.