விளையாட்டு திருவிழா - (10.01.2019) : இந்தியா Vs ஆஸி. ஒருநாள் போட்டி : நாளை மறுநாள் சிட்னியில் தொடக்கம்
பதிவு : ஜனவரி 10, 2019, 09:32 PM
விளையாட்டு திருவிழா - (10.01.2019) : ஆசிய கோப்பை கால்பந்து தொடர்: இந்தியா Vs யு.ஏ.இ. இன்று மோதல்
விளையாட்டு திருவிழா - (10.01.2019) :

இந்தியா Vs ஆஸி. ஒருநாள் போட்டி : நாளை மறுநாள் சிட்னியில் தொடக்கம்
இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நாளை மறுநாள் தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இருபது ஓவர் தொடரை சமன் செய்தது. பின்னர் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இந்தி நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இதில் தோனி, அம்பத்தி ராயுடு, ஷிகர் தவான், ரோஹித் சர்மா, கேதர் ஜாதவ் ஆகியோர் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர். பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது இந்திய அணிக்கு குறையாக கருதப்பட்டாலும், புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட வீரர்களுக்கு தங்களது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பாக அமையும். 

ஆசிய கோப்பை கால்பந்து தொடர்: இந்தியா Vs யு.ஏ.இ. இன்று மோதல்
ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் இந்தியா, ஐக்கிய அரபு அமீரக அணி இன்று மோதுகிறது. அபுதாபியில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி  இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது. குருப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தாய்லாந்தை 4க்கு1 என்ற கணக்கில் வீழ்த்தியது. தரவரிசையில் 79வது இடத்தில் உள்ள யு.ஏ.இ. அணியை வீழ்த்தும் உத்வேகத்துடன் இந்தியா உள்ளது. இரு அணிகளும் இதுவரை 13 முறை மோதியுள்ளன. இதில் யு.ஏ.இ. அணி 8 முறையும் இந்திய அணி 3 முறையும் வென்றுள்ளது. இரு போட்டி டிராவில் முடிவ்டைந்துள்ளது. 

வாலிபால் போலவே ஆடப்படும் பிஸ்ட் பால் : பிஸ்ட் பால்' ஆட்டத்தின் விதிமுறைகள் என்ன..?  
மாற்றம் ஒன்றே மாறாதது என்ற கூற்றுக்கு ஏற்றவாறு, வாலியால் போட்டியையே சில மாறுதல்களுடன் நடத்தப்படும் FISTBALL குறித்து தற்போது பார்க்கலாம். Fist ball உலகின் அனைத்து கண்டங்களிலும், 56 நாடுகளில் விளையாடப்படும் ஓர் விளையாட்டு. இதற்கும் வாலிபால் போட்டிக்கும் ஒரு சில வித்தியாசங்களே காண முடியும். வாலிபால் போட்டியில் அணிக்கு ஆறு பேர் பிஸ்ட்பாலில் அணிக்கு 5 பேர் மட்டுமே. வாலிபால் போட்டியில் கைகளை திறந்து கொண்டு பந்தை தாக்குவார்கள், ஆனால் பிஸ்ட் பாலில் கைகளை மூடிக்கொண்டு தான் பந்தை தாக்க வேண்டும். அதே போல வாலிபால் போட்டியில் பந்தை தரையில் பட விட கூடாது, ஆனால் பிஸ்ட் பால் போட்டியில் பந்தை ஒருமுறை தரையில் பட விடலாம். இதுபோன்ற ஒரு சில மாற்றங்களாலே இந்த போட்டி வாலிபாலில் இருந்து வேறுபடுகிறது. ஆடுகளத்தின் மொத்த நீளம் 50 மீட்டர், அகலம் 20 மீட்டர், வலையின் உயரம் 2 மீட்டர். வலையில் இருந்து மூன்று மீட்டர் தூரத்தில் இருந்து சர்வீஸ் போட வேண்டும். அணிக்கு மொத்தம் 5 பேர், சிறியவர்கள், பெண்கள், முதியவர்கள் என பல வகைகளில் போட்டி நடத்தப்படுகிறது. உலகம் முழுவதும் பல நாடுகளில் விளையாடப்பட்டாலும், இந்த போட்டியில் ஜெர்மனியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 1968 ஆம் ஆண்டு முதல் இதற்கான உலக்கோப்பை போட்டி நடைபெற்றுவரும் நிலையில், இதுவரை இரண்டு மூன்று மட்டுமே ஜெர்மனி தங்க பதக்கத்தை தவர விட்டுள்ளது. அந்த மூன்று முறையிலும் இரண்டு வெள்ளி பதக்கங்களையும் ஒரு வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளது. தற்போது தமிழகம், தெலுங்கானா என இந்தியாவின் பல மாநிலங்களிலும் பிஸ்ட் பால் போட்டிகள் விளையாட தொடங்கியுள்ளனர். எனவே பிஸ்ட் பால் போட்டியில் தனி சாம்ராஜ்யம் நடத்தும் ஜெர்மனியை வரும்காலங்களில்  இந்தியா வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


உலகின் வினோத விளையாட்டுகள் : ஆச்சரியத்தை ஏற்படுத்தும்
 வினோதம்     
இப்படியெல்லாமா விளையாடுகிறார்கள் என ஆ​ச்சர்யப்படும் வகையில், உலக அளவில் இன்னும் எவ்வளவோ ஆச்சர்ய விளையாட்டுகள் இருக்கின்றன.. அது குறித்து உங்களுக்காக?

தக்காளிகளை மக்கள் மீது வீசி எறியும் வினோத விளையாட்டு
ஸ்பெயின் நாட்டின் வாலன்சியான் நகரில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் இறுதி புதன் கிழமையன்று தக்காளி திருவிழா தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவின் போது ஒருவர் மீது மற்றொருவர் தக்காளிகளை வீசியெறிந்து விளையாடுவார்கள். 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடைசி புதன் கிழமையன்று எதிர்பாராத விதமாக ஒருவர் தக்காளி கூடையின் மேல் விழுந்ததால் அன்று முதல் இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

சேற்றில் உருண்டு புரளுவதற்காக ஒரு திருவிழா
தென்கொரியாவின் சியோல் பகுதியில் கோடைக்காலங்களில் சேறு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். செயற்கையாக உருவாக்கப்பட்ட சேற்றில், ஆண்களும் , பெண்களும் உருண்டு புரண்டு விளையாடுவதே இந்த mud festival எனப்படும் சேறு திருவிழா. இதுமட்டுமின்றி இந்த திருவிழாவில் இசை, வான வேடிக்கை, உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களும் அடங்கும். எனவே இதில் பங்கேற்க ஆண்டுதோறும்  பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

மனைவிகளை தூக்கி கொண்டு ஓடும் கணவர்கள்
மனைவிகளை சுமந்து செல்லும் போட்டி இந்த வினோத போட்டியின் விதி, கணவர்கள் தங்களது மனைவிகளை தோலில் சுமந்தபடி பல்வேறு தடைகளை தாண்டி 253 மீட்டர் தூரம் ஓட வேண்டும். இதன் மற்றொரு  முக்கிய விதி, மனைவி குறைந்தது 49 கிலோ எடை இருக்க வேண்டும். முதலில் பின்லாந்து நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த விளையாட்டு தற்போது பல நாடுகளிலும் கவுரவ விளையாட்டாக விளையாடப்படுகிறது.

பலூன்களால் மூடப்பட்ட உடல் - ஓர் விசித்திர கால்பந்து போட்டி
bubble football, உடல் முழுக்க காற்றினால் நிரப்பப்பட்ட பலூன் கொண்டு மூடிய நிலையில் கால்பந்து விளையாடினால் எப்படி இருக்கும். அது தான் இந்த bubble football.ஆனால் மற்ற கால்பந்து போட்டிகளின் விதிகளில் இருந்து மாறாக, இப்போட்டியில் வீரர்களை இடித்து தள்ளவும் அனுமதி உண்டு. இந்த விளையாட்டு முதலில் நார்வே நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது உலகின் பல நாடுகளில் இந்த விளையாட்டு பிரபலமடைந்துள்ளது.

சரிவான மலை - சறுக்கி ஓடும் மக்கள்
இங்கிலாந்தின் கிளவுசஸ்டர் (Gloucester) என்ற பகுதியில் மிகவும் பிரபலமான விளையாட்டு தான் சீஸ் ரோல்... இந்த விளையாட்டின் விதி, நான்கு கிலோ எடைகொண்ட சீஸ் உருண்டை சரிவான புல்தரையில் உருட்டிவிடப்படும், அதனை பிடிக்க சரிவான தரையில் உருண்டும், சறுக்கியும் வீரர்கள் ஓடுவார்கள். விரட்டி பிடிப்பவர்களுக்கோ அல்லது முதலில் மலை அடிவாரத்தை அடைபவர்களுக்கோ அந்த சீஸ் உருண்டை பரிசாக அளிக்கப்படும். இந்த விளையாட்டில் பங்குபெறும் வீரர்களுக்கு லேசான காயங்களும் ஏற்படுவதுண்டு.
 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.