விளையாட்டு திருவிழா (06.12.2018) - ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட் : ஆட்டநேர முடிவில் இந்தியா 250-9

விளையாட்டு திருவிழா (06.12.2018) - ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது.
விளையாட்டு திருவிழா (06.12.2018) - ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட் : ஆட்டநேர முடிவில் இந்தியா 250-9
x
விளையாட்டு திருவிழா (06.12.2018) 

அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்றும் வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்த‌து. 

அதன் படி களமிறங்கிய தொடக்க ஆட்டக்கார‌ர் கே.எல். ராகுல், இரண்டாவது ஓவரிலே ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். பயிற்சி ஆட்டத்தில் சத‌ம் விளாசிய முரளி விஜயும் சோபிக்க தவறினார். 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி 3 ரன்கள் எடுத்த போது உஸ்மான் கவாஜாவின் அட்டகாசமான கேட்சால் ஆட்டமிழந்தார். ரஹானேவும் தேவையில்லாத ஷாட் ஆடி 13 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 

புஜாராவுடன் ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா அதிரடியாக விளையாட முயற்சித்தார். 3 சிக்சர்கள் விளாசிய அவர், 4வது சிக்ஸ் அடிக்க முயன்ற போது கேட்ச் ஆனார். 

அஸ்வின் பொறுப்புடன் விளையாடி புஜாராவுக்கு துணையாக நின்றார்.  ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் புஜாரா பொறுப்புடன் விளையாடி தனது 16 சதத்தை பூர்த்தி செய்தார். 

மேலும் டெஸ்ட் அரங்கில் 5 ஆயிரம் ரன்களை புஜாரா கடந்தார். 
123 ரன்கள் எடுத்த போது புஜாரா ரன் அவுட்டாக,ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து இந்தியா 250 ரன்கள் எடுத்துள்ளது. 

போட்டியின் முதல் 10 ஓவர் ப்போதும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும்.  ஆனால் இந்திய வீரர்கள் தேவையில்லாமல் ஷாட் ஆடி தங்களது விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.  புஜாரா போல் சற்று பொறுமையுடன் விளையாடி இருந்தால், இந்தியாவின் கையே இந்தப் போட்டியில் ஓங்கி இருக்கும். அதே போல் விஹாரிக்கு பதில் அணியில் இடம்பெற்ற ரோஹித்தும் தேவையில்லாத ஷாட்களை ஆடினார். புஜாரா மட்டும் இன்று இல்லை என்றால் இந்தியா 140 ரன்களுக்கே சுருண்டு இருக்கும். 

உலக சாம்பியன்ஷிப் டெட் டைவிங்

மிகவும் பிரபலமான இந்த காமெடியில் இடம்பெற்றுள்ள விளையாட்டு தான் DEATH DIVING..  நீச்சல் குளத்தின் உயரத்திலிருந்து குதிக்கும் சாகச போட்டி. நடப்பாண்டிற்கான உலக சாம்பியன்ஷிப் DEATH DIVING போட்டி நார்வேவில் நடைபெற்றது. இதில் உலகின் முன்னணி வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்

BELLY FLOOP,STAPLES,DODSING ஆகிய ஸ்டைல்களில் வீரர்கள் இந்த சாகசத்தை மேற்கொண்டனர்.வீரர்களின் டைவிங் ஸ்டைல், கடின முறைக்கு ஏற்ப புள்ளிகள் வழங்கப்பட்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தப் போட்டியை ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர். 

விளையாட்டு தொடரை பிரபலப்படுத்தும் பாடல்கள்

உலகக் கோப்பை போன்ற பெரிய விளையாட்டு தொடர் நடைபெறுவது என்றால் அதனை பிரபலப்படுத்துவதற்காக வெளியிடப்படும் பாடல்களை எதிர்நோக்கி காத்திருக்கும் ரசிககளும் உண்டு..

2010 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக வெளியிடப்பட்ட SHAKIRA வின் Waka waka பாடல் , பட்டி தொட்டியிலும் ஹிட் ஆனது..


அதே தொடருக்காக பாப் பாடகர் கேனன் வெளியிட்ட WAVING FLAG பாடல், ரசிகர்களால் இன்றும் மெறக்க முடியாதவை..

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடருக்காக ஏ.ஆர். ரஹ்மான் உருவாக்கிய பாடல், பலரின் மொபைலுக்கு ரிங் டோன் ஆனது.

2010 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிக்காக மீண்டும் ஏ.ஆர். ரஹ்மான் குரல் மற்றும் இசையில் பாடல் வெளியாகி ஹிட்டானது,

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக ஷங்கர் மகாதேவன் குரவில் வெளியான DE GHUMAKE பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது.

2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு Its time for us  பாடலுக்கு ரசிகர்களை முனுமுனுக்க வைத்தது

இந்த வரிசையில் தற்போது 2018ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்காக ஏ.ஆர். ரஹ்மான், ஷாரூக் கான் கூட்டணியில் உருவாகியுள்ள பாடலும் இடம்பிடித்துள்ளது. 

காளை மாட்டுடன் குங்ஃபூ சண்டை

சீனாவின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று KUNG FU BULL FIGHTING.. காளை மாட்டுடன் குங்ஃபூ சண்டை போட்டு, மாட்டை கீழே தள்ள வேண்டும் இது தான் போட்டி

மனிதனை விட 5 மடங்கு எடை அதிகம் உள்ள காளையை தனியாக எதிர்கொள்வது எளிதான காரியம் அல்ல.. வீரர்களின் உயருக்கும்  உத்தரவாதம் இல்லை. 

இதற்காக வீரர்கள் பல்வேறு  பயிற்சிகளை ஈடுபடுகின்றனர். காளை போன்ற பொம்மையை வைத்தும் வீரர்கள் பயிற்சி மேற்கொள்கின்றனர்.

அழிந்து வரும் இந்தப் போட்டியை , வளர்க்க சீன அரசே நிதி வழங்கி வளர்த்து வருகிறது.  இந்தப் போட்டியை மாதந்தோறும் நடத்தி சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். 

இளைஞர்களுக்கு இந்தப் போட்டி குறித்து கற்று தர பல பயிற்சி மையங்களும் நடத்தப்பட்டு வருகிறது.  இந்தப் போட்டிக்கு வழக்கம் போல் பீட்டா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  விளங்குகள் துன்புறத்தப்படுவதாக குற்றஞ்சாட்டும் பீட்டா , இந்தப் போட்டியை தடை செய்யாமல் விட மாட்டோம் என்று சபதமிட்டுள்ளது. 

ஆனால் பீட்டாவின் புகாரை மறுத்து வரும் பயிற்சியாளர்கள், மாடுகள் அதீத கவனத்துடன் பராமரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். இந்தப் போட்டி மனிதர்களுக்கு தான் ஆபத்தே தவற, மாடுகளுக்கு இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 



Next Story

மேலும் செய்திகள்