விளையாட்டு திருவிழா - 26.11.2018 - தொடரை சமன் செய்தது இந்தியா
பதிவு : நவம்பர் 26, 2018, 09:25 PM
விளையாட்டு திருவிழா - 26.11.2018 - கேப்டன் பதவியை காப்பாற்றி கொண்ட கோலி
விளையாட்டு திருவிழா - 26.11.2018

கேப்டன் பதவியை காப்பாற்றி கொண்ட கோலி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இருபது ஓவர் தொடரை 1க்கு1 என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்தது.

சிட்னியில் நடைபெற்ற மூன்றாவது இருபது ஓவர் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தினர். குறிப்பாக குர்னல் பாண்டியா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

பேட்டிங்கிலும் இந்திய அணி வீரர்கள் ஜொலித்தனர். ஷிகர் தவான், ரோஹித் சர்மா, கேப்டன் கோலி, தினேஷ் கார்த்திக் ஆகியோர் ரன்கள் குவித்தது, இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கையை அளித்தது.

ஆனால், இந்திய அணியில் இடம்பெற்றுள்ள கே.எல்.ராகுல், இந்த தொடரில் சொதப்பினார். இதனால், இருபது ஓவர் அணியில் அவர் நீடிக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதிரடி வீரர் ரிஷப் பண்ட் SHORT BALL ஐ அடிக்க முடியாமல் அவுட் ஆனதும் குறையாக பார்க்கப்படுகிறது.

தொடரை சமன் செய்து, விராட் கோலி தனது கேப்டன் பதவியை காப்பாற்றி கொண்டார் என்பதே நிதர்சனம்.. 

ஹர்மன்பிரீத், மித்தாலி ராஜ் இடையே மோதல்?

மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற உலக மகளிர் டி 20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வியை தழுவியது. 

தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்திடம் எளிதில் தோற்றது 

சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் போட்டிகள் நடைபெறுவதால், இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு  தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது 

இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது மித்தாலி ராஜ் அரையிறுதி போட்டியின் போது அணியிலிருந்து நீக்கப்பட்டது தான்.

முதலில் மித்தாலி ராஜ்க்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்பட்ட நிலையில், அவர் முழு உடல் தகுதியுடன் இருந்தார். எனினும், அணியின் எதிர்காலத்திற்காக மித்தாலி ராஜ் நீக்கப்பட்டார் என தடாலடியாக அறிவித்தார் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங்..

இந்த தொடரில் 2 அரைசதங்கள் விளாசி நல்ல பார்மில் இருந்த மித்தாலி ராஜ் ஏன் நீக்கப்பட்டார்? கேப்டன் ஹர்மன்பிரீத் சிங்கிற்கும், மித்தாலி ராஜ்க்கும் இடையே என்ன சண்டை..? அப்படி சண்டை இருந்தால், அதனை தீர்க்காமல் அணி நிர்வாகம் என்ன செய்தது என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த விவகாரம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. வீரர்ங்கனைகள் இடையே ஏற்பட்ட மன கசப்பால், இந்தியாவின் உலகக் கோப்பை பறிபோய்விட்டதாக கிரிக்கெட் விமர்சர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

2018- பார்முலா ஓன் பந்தய சாம்பியன்ஷிப்

2018ஆம் ஆண்டின் பார்முலா ஓன் சாம்பியன்ஷிப் தொடரின் கடைசி பந்தயம் அபுதாபியில் நடைபெற்றது.

தொடரை வெற்றியுடன் முடிக்க வேண்டிய உத்வேகத்தில் உலகின் முன்னணி வீரர்கள் இந்தப் பந்தயத்தில் பங்கேற்றனர்.

RENAULT நிறுவன வீரர் NICO HULKENBERG இன் கார் கோர விபத்தில் சிக்கியது.  உடனடியாக மீட்புக் குழுவினர் காரில் ஏற்பட்ட தீயை அணைத்து வீரரை பத்திரமாக மீட்டனர்.

மின்னொளியில் நடைபெற்ற இந்த பந்தயத்தை ஒரு மணி நேரம் 39 நிமிடம் 40 விநாடிகளில் கடந்து பிரிட்டன் வீரர் ஹாமில்டன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். நடப்பாண்டில் அவர் வெல்லும் 11வது பந்தயம் இதுவாகும்..

2வது இடத்தை ஜெர்மனியின் விட்டல் பிடித்தார். பந்தய எல்லைக் கோட்டை கடந்தவுடன், இரு நட்சத்திர வீரர்களும் புகை கிளப்ப, காரை சுற்றி வெற்றியை கொண்டாடினர்.

இந்தப் பந்தயத்துடன் ஓய்வு பெறும் 2 முறை உலக சாம்பியனான ALONSO. 11 வது இடத்தை பிடித்து, கண்ணீர் மல்க வெளியேறினார். 

மேரி கோம் கடந்து வந்த பாதை

மேரி கோம்..!! குத்துச்சண்டை உலகில் இந்தியாவுக்கு பெருமை தேடி தந்த தங்க மங்கை..

மனிப்பூர் மாநிலத்தில் உள்ள குக் கிராமத்தில் 1983 ஆம் ஆண்டு பிறந்தார். சின்ன வயசுல, தடகள போட்டியில் அதீத ஆர்வம் காட்டி இருக்காங்க..மேரி கோமோட ஹீரோ,  டிங்கோ சிங், 1998 ஆம் ஆண்டு ஆசிய குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வாங்கி இருக்கார்.

மனிப்பூரை சேர்ந்த அவருக்கு, கிடைத்த வரவேற்பை பார்த்து நாமும் அவரை மாதிரி சாதிக்கனும்னு களமிறங்கினாங்க மேரி கோம்.மேரி கோம் முதல் முறையா தேசிய அளவில் பதக்கம் வாங்குனது நம்ம சென்னையில் தான்..

2001 ஆம் ஆண்டு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக களமிறங்கி 18 வயதில் வெள்ளிப் பதக்கம் வாங்கி இருக்காங்க. 2002, 2005, 2006 ஆம் ஆண்டு உலக குத்துச்சண்டையில் தங்கப் பதக்கம் வாங்குனாங்க..

2007ஆம் ஆண்டு ராஜூவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு தோனி பெரும், மேரி கோம் பெரும் தான் பரிந்துரை செய்ப்பட்டது. ஆனா தோனிக்கு ன் விருது கிடைச்சது. 

குழந்தைகள் ஈன்ற பிறகு மீண்டும் 2008ஆம் ஆண்டு குத்துச்சண்டையில் களமிறங்கினாங்க மேரி கோம்..அப்போவும் உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வாங்குனதங்க மேரி கோம்.

2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் வாங்குனாங்க..

2014 ஆம் ஆண்டு ஆசிய போட்டியில் களமிறங்கி தங்கம் வென்று சாதனை படைச்சாங்க.

2016ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு மேரி கோம் தகுதி பெற முடியல..  மேரி 2016ஆம் ஆண்டு மாநிலங்களவையில் நியமன எம்.பி. ஆக பதவியேற்கிறாங்க..திரும்பவும் 34வது வயதில் ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம்,  2018 காமன் வெல்த் தங்கம், 2018 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தங்கம். உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் 6 முறை தங்கப் பதக்கம் வென்ற ஒரே வீராங்கனை.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.