விளையாட்டு திருவிழா - 08.11.2018 - உலக சாதனை - ஒரே ஓவரில் 43 ரன்கள்
பதிவு : நவம்பர் 08, 2018, 08:58 PM
விளையாட்டு திருவிழா - 08.11.2018 - கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த சாதனையாளர்கள்
விளையாட்டு திருவிழா - 08.11.2018

பிரபல கிரிக்கெட் மைதானத்தை மாற்ற முடிவு
இலங்கையில் பிரபலமான கிரிக்கெட் விளையாட்டரங்கை மாற்றுவது பல்வேறு தரப்பினரிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளதை பதிவு செய்கிறது இந்த தொகுப்பு...

டாப் 4 - பறந்து பறந்து அடிக்கும் 'போஸாபால்'
கால்பந்து, வாலிபால்,ஜிம்னாஸ்டிக்  என மூன்றையும் கலந்த ஓர் விசித்திர விளையாட்டு குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்....தரே மேலே கால் படாம ச்சும்மா பருந்து பருந்து அடிப்பேன் என சூப்பர் ஸ்டார் சொல்வாரே. அந்த பன்ச்சுக்கு ஏற்ற பலே விளையாட்டு இதுதான். இதன் பேர் போஸாபால் (Bossaball).ஃபுட்பால், வாலிபால், அதனோடு கொஞ்சம் ஜிம்னாஸ்டிக்ஸ்... இதெல்லாம் கலந்து செய்த கலவையான இந்த போஸாபாலுக்கு நமது பட்டியலில் நான்காம் இடம். மனிதர்களை பத்தடி உயரம் வரை எம்பிக் குதிக்க வைக்கும் ட்ரம்போலின்கள் (trampoline) இந்த விளையாட்டில் இரண்டு பக்கமும் இருக்கும். ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர், வீராங்கனைகள் இதில் ஜம்ப் செய்து ஜம்பம் காட்டும் அழகே தனிதான்.இந்த விளையாட்டுக்கென்று தனிப்பட்ட  ஆடுகளம் air bag வடிவில் இருக்கும். அதில் காற்று நிரப்பி ஆட வேண்டியதுதான். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த (Filip Eyckmans) என்பவர்தான் இந்த விளையாட்டையும் ஆடுகளத்தையும் வடிவமைத்தவர். 2004ஆம் ஆண்டில் முதன் முதலாக விளையாடப்பட்ட இந்த விளையாட்டு இப்போது மெக்சிகோ. ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி என சுமார் 30 நாடுகளில் விளையாடப்படுகிறது. ஆண்டுதோறும் ஐரோப்பிய கோப்பையும் 5 வருடங்களுக்கு ஒருமுறை உலகக்கோப்பையும் போஸாபாலில் நடத்தப்படுகிறது. உலக வரலாற்றில் இத்தனை சீக்கிரம் இவ்வளவு பெரிய உயரத்தைத் தொட்ட விளையாட்டு வேறெதுவும் இல்லை. அட விளையாட்டே எம்பிக் குதிப்பதுதானே. அப்புறம் உயரம் தொட முடியாதா என்ன?

விராட் கோலியை விட மற்ற நாட்டு வீர‌ர்கள் தான் பிடிக்கும்
விராத் கோலி என்றவுடன் ரன் மிஷின், இந்திய அணியின் கேப்டன், நம்பிக்கை நட்சத்திரம் இவைகளுடன் சேர்ந்து அவரது ஆக்ரோஷமும் நினைவுக்கு வரும். சமீபத்தில் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக, டெஸ்ட் போட்டிகளில் ஹாட்ரிக் சதங்கள், ஒருநாள் போட்டியில் விரைவான 10 ஆயிரம் ரன்கள் என ருத்ர தாண்டவம் ஆடிய கோலி, இருபது ஓவர் போட்டிகள் பங்கேற்காமல் ஓய்வில் உள்ளார்.
ஆட்டத்திற்கு ஓய்வு கொடுத்தாலும்,  ஆக்ரோஷத்திற்கு ஓய்வு கொடுக்காத கோலி டுவிட்டர் வழியே அதனை வெளிப்படுத்தியிருக்கிறார். கோலியை விட இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீர‌ர்களின் ஆட்டத்தை தான் விரும்பி பார்ப்பேன் என்று, இந்திய ரசிகர் ஒருவர் தெரிவித்த கருத்தில் சீற்றமடைந்த கோலி தனது ஆதங்கத்தை புன்னகை கலந்து வெளிப்படுத்தியிருக்கிறார். இந்திய வீர‌ர்களின் ஆட்டத்தை விட, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீர‌ர்கள் ஆட்டத்தை விரும்புவதாக கூறி இருக்கிறார். இவர்கள் இந்தியாவில் வாழ வேண்டுமா? இவர்கள் வேறு நாட்டுக்கு செல்ல வேண்டும்.என்னை விரும்பாத‌து பற்றி கவலை இல்லை...வேறு நாட்டை விரும்புவோர் ஏன் இந்தியாவில் வாழ வேண்டும்? மற்ற நாட்டு வீர‌ர்களை பிடிக்கும் என்றால் ஏன் இந்தியாவில் இருக்கிறீர்கள்... அங்கேயே சென்றுவிடுங்கள் என்று கூறியிருக்கிறார் விராத்கோலி. குடிப்பது பிரான்சில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தண்ணீர், திருமணம் இத்தாலியில். ஜெர்மன் நாட்டு நிறுவனமான பூமா உள்ளிட்ட பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 100 கோடி ரூபாய்க்கும் மேல் ஒப்பந்தம். இவ்வாறு பல வழிகளில் வெளி நாட்டு சார்ந்திருக்கும் கோலி, இந்த கருத்தை தெரிவித்தால் ரசிகர்கள் பேசாமல் இருப்பார்களா... 
எல்லாவற்றிற்கும் மேலாக கோலியே தனது ஆரம்ப காலத்தில் அதாவது 2008 ஆம் ஆண்டுகளில் தனது Favorite player தென் ஆப்பிரிக்க வீர‌ர் கிப்ஸ் தான் என கூறியுள்ளாராம்.

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த சாதனையாளர்கள்...
பல்வேறு துறைகளில் அசாத்திய சாதனைகள் புரிந்தவர்களுக்கு, கின்னஸ் அமைப்பு, விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளது. உலக சாதனையாளர் தினத்தை முன்னிட்டு, நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. கூடைப்பந்து, ஓவியம், wheel chair சாகசம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் சாதனை புரிந்தவர்களுக்கு கின்னஸ் விருது அளிக்கப்பட்டது.

உலக சாதனை - ஒரே ஓவரில் 43 ரன்கள்
நியூசிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் போட்டிகளில் 43 ரன்கள் குவிக்கப்பட்டு உலக சாதனை முறியடிக்கப் பட்டுள்ளது. நியூசிலாந்தின் மத்திய மற்றும் வடக்கு மாவட்ட அணிகள் மோதிய இந்த போட்டியில், மத்திய மாவட்ட அணி வீர‌ர் வில்லியம் லூடிக், ஒரே ஓவரில் இரண்டு நோ பால்கள் வீசியுள்ளார். இதனை சரியாக பயன்படுத்திகொண்ட வடக்கு மாவட்ட வீர‌ர்கள், பிரெட் ஹாம்ப்டன் மற்றும் ஜோ கார்ட்டர் ஜோடி ஒரு பவுண்டரி மற்றும் ஆறு சிக்சர்கள் பறக்க விட்டு 43 ரன்கள் குவித்துள்ளனர். ஒரே ஓவரில் 39 ரன்கள் எடுத்த‌தே இதுவரை உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நாளை தொடங்குகிறது மகளிர் டி20 உலக கோப்பை
மகளிர் இருபது ஓவர்கள் கிரிக்கெட் போட்டி நாளை மேற்குஇந்திய தீவுகளில் உள்ள புரோவிடென்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. நாளை நடைபெறவுள்ள முதல் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இன்று இங்கிலாந்துக்கு எதிராக நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிக பட்சமாக இந்திய அணியின் கேப்டன் Harmanpreet Kuar 62 ரன்கள் எடுத்தார்.

தொடர்புடைய நிகழ்ச்சிகள்

10.30 காட்சி - 23.09.2018

10.30 காட்சி - 23.09.2018

456 views

ரொக்கம் (07/09/2018)

ரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..

332 views

குரு

ஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..

189 views

பிற நிகழ்ச்சிகள்

விளையாட்டு திருவிழா - (14.01.2019) : இந்தியா ஆஸி நாளை 2வது ஒருநாள் போட்டி

விளையாட்டு திருவிழா - (14.01.2019) : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்

100 views

விளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஒருநாள் கிரிக்கெட் நாளை தொடக்கம் : டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்க்குமா ஆஸி?

விளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் விளையாட பி.சி.சி.ஐ. தடை

70 views

விளையாட்டு திருவிழா - (10.01.2019) : இந்தியா Vs ஆஸி. ஒருநாள் போட்டி : நாளை மறுநாள் சிட்னியில் தொடக்கம்

விளையாட்டு திருவிழா - (10.01.2019) : ஆசிய கோப்பை கால்பந்து தொடர்: இந்தியா Vs யு.ஏ.இ. இன்று மோதல்

41 views

விளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்திய வீரர்களின் செயல்பாடு எப்படி?

விளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்தியாவிலேயே நடைபெறுகிறது ஐ.பி.எல் போட்டி

43 views

விளையாட்டு திருவிழா - (08.01.2019) : டெஸ்ட் தரவரிசை புஜாராவுக்கு 3வது இடம்

விளையாட்டு திருவிழா - (08.01.2019) : புதிய உச்சம் தொட்ட ரிஷப் பண்ட்

29 views

விளையாட்டு திருவிழா - (07.01.2019) : ஆஸி. மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை

விளையாட்டு திருவிழா - (07.01.2019) : டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.