விளையாட்டு திருவிழா - 02.11.2018 - மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடர் வெற்றி
பதிவு : நவம்பர் 02, 2018, 09:05 PM
விளையாட்டு திருவிழா - 02.11.2018 - Bossaball விளையாட்டு பற்றிய ஒரு அலசல்..
விளையாட்டு திருவிழா - 02.11.2018 

Bossaball விளையாட்டு பற்றிய ஒரு அலசல்..
சற்று விசித்திரமான விளையாட்டுகளில்  ஓன்றாக இருக்கிறது போஸாபால். போஸாபால் என்ற இந்த விளையாட்டு கொஞ்சம் கஷ்டமான விளையாட்டும் கூட. ஒவ்வொரு அணியிலும் 4 வீரர்கள் இடம்பெறுவர். கிட்டத்தட்ட கைப்பந்து போலத்தான் விதிமுறைகள் உள்ளன. ஆனால் வீரர்கள் கால்களால் கூட பந்துகளை எதிர்புறம் தள்ளலாம். கைப்பந்தைப் போல இவர்கள் தரையில் விளையாடுவதில்லை. வீரர்கள் குதித்தெழ ஏற்றவகையில்  இருபுறமும்  trampoline என்ற மெத்தைகள் வைக்கப்பட்டிருக்கும். அவற்றின் மீது குதித்து எழுந்து பந்துகளை எதிர்புறம் வீசுகிறார்கள். இன்னுமொரு சுவாரஸ்யம் இவ்விளையாட்டில் கலந்திருக்கிறது. அது இசை. ஒருபுறம் வீரர்கள் தீவிரமாக விளையாடிக்கொண்டிருக்க, அவர்களின் மூடுக்கேற்ப, இசைக்கலைஞர்கள் இசை மீட்டிக்கொண்டிருப்பர். இது வீரர்களை மட்டுமல்ல பார்வையாளர்களையும் உற்சாகப்படுத்தும். பார்வையாளர்கள் ஆட்டம் போட்டுக்கொண்டே விளையாட்டை ரசிக்க வைக்கவும் இந்த இசை உதவுகிறது.
இவ்விளையாட்டு ஸ்பெயின் நாட்டில் தோன்றியுள்ளது.  Brazil Argentina , Mexico,Israel, Egypt, Saudi Arabia, Qatar, Kuwait , Singapore போன்ற நாடுகளில் இவ்விளையாட்டு பிரபலம்.

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர்
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் தகுதி பெற்றுள்ளார். பாரீஸ் நகரில் நடைபெற்ற 4வது சுற்று ஆட்டத்தில் இத்தாலி வீரர் FABIOவை எதிர்கொண்ட ஃபெடரர், 6க்கு4,6க்கு3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். 

பாரீஸ் மாஸ்டர்ஸ்- காலிறுதியில் ஜோகோவிச்
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு நட்சத்திர வீரர் ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார். போஸ்னியா வீரர் தமீர் உடனான ஆட்டத்தில் 6க்கு1,2க்கு1 என்ற கணக்கில் ஜோகோவிச் முன்னிலை பெற்றிருந்தார். அப்போது தமீர் காயம் காரணமாக விலகினார். இதன் மூலம், காலிறுதி சுற்றுக்கு தகுதிப் பெற்ற ஜோகோவிச், தரவரிசை பட்டியலில் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறினார். 

காலிறுதி சுற்றுக்கு ஸ்வெரேவ் தகுதி 
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு நட்சத்திர வீரர் ஸ்வெரேவ் தகுதி பெற்றுள்ளார். அர்ஜென்டின வீரர் டிகோவை எதிர்கொண்ட அவர், 6க்கு4,6க்கு2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். தொடர்புடைய நிகழ்ச்சிகள்

10.30 காட்சி - 23.09.2018

10.30 காட்சி - 23.09.2018

269 views

ரொக்கம் (07/09/2018)

ரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..

152 views

குரு

ஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..

94 views

பிற நிகழ்ச்சிகள்

விளையாட்டு திருவிழா - 16.11.2018 - ஐ.பி.எல் - நீக்கப்பட்ட வீரர்களின் விவரம்

விளையாட்டு திருவிழா - 16.11.2018 - ஐ.பி.எல். 12வது சீசனில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் டிசம்பரில் நடைபெறுகிறது.

6 views

விளையாட்டு திருவிழா - 14.11.2018 - கோலியின் கேப்டன் பதவிக்கு ஆபத்து

விளையாட்டு திருவிழா - 14.11.2018 - கேப்டனாகிறாரா ஹிட் மேன் ரோஹித் சர்மா?

531 views

விளையாட்டு திருவிழா - 13.11.2018 - தோனி இடத்தை பிடிப்பாரா ரிஷப் பண்ட்?

விளையாட்டு திருவிழா - 13.11.2018 - ரிஷப் பண்ட்க்கு காத்திருக்கும் சவால்கள்

225 views

விளையாட்டு திருவிழா - 12.11.2018 -தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா

விளையாட்டு திருவிழா - 12.11.2018 -பிரேசில் ஃபார்முலா ஓன் கார் பந்தயம்

43 views

விளையாட்டு திருவிழா - 09.11.2018 - ஒலிம்பிக்கில் மகளிர் மட்டும் பங்கேற்கும் விளையாட்டு....

விளையாட்டு திருவிழா - 09.11.2018 - நீச்சல், நடனம், ஜிம்னாஸ்டிக் என மூன்றும் சேர்ந்த விளையாட்டு

12 views

விளையாட்டு திருவிழா - 08.11.2018 - உலக சாதனை - ஒரே ஓவரில் 43 ரன்கள்

விளையாட்டு திருவிழா - 08.11.2018 - கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த சாதனையாளர்கள்

36 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.