விளையாட்டு திருவிழா - 01.11.2018 - மே.இ.தீவுகளுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டி: இந்திய அணி அபார வெற்றி

விளையாட்டு திருவிழா - 01.11.2018 - லட்சுமணுக்கு இன்று 44வது பிறந்தநாளை
விளையாட்டு திருவிழா - 01.11.2018 - மே.இ.தீவுகளுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டி: இந்திய அணி அபார வெற்றி
x
விளையாட்டு திருவிழா - 01.11.2018

தொடரை 3-1 என்ற கணக்கில் வென்ற இந்தியா
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியை வென்றது மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 3க்கு1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 
திருவனந்தப்புரத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய வீரர்களின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல், மேற்கிந்தியத் தீவுகள் அணி 34வது ஓவரில் 104 ரன்களுக்கு சுருண்டது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 105 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை எதிர்கொண்ட இந்திய அணியில் தொடக்க வீரர் தவான் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 63 ரன்கள் விளாசினார். இதனால் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 14 புள்ளி 5வது ஓவரில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்திப் போட்டியின் போது ரோஹித் சர்மா ஒருநாள் போட்டியில் 200வது சிக்சரை விளாசினார். மேலும் நடப்பாண்டில் ஆயிரம் ரன்களை ரோஹித் சர்மா கடந்தார். ஆடுகளம் பந்துவீச்சிற்கு சாதகமான இருந்த நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து மிகப் பெரிய தவறை இழைத்தது. 
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக தொடர்ந்து 5வது முறையாக தொடரை இந்திய அணி கைப்பற்றியது. 

லட்சுமணுக்கு இன்று 44வது பிறந்தநாளை 

VVS LAXMAN...இந்திய கிரிக்கெட் அணியின் தலைச்சிறந்த வீரர். 1974ஆம் ஆண்டு ஐதராபாத்தில் பிறந்த LAXMAN  இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடினார். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி எப்போது தடுமாறினாலும், LAXMAN இருக்க பயமேன் என்ற தைரியத்தில் ரசிகர்கள் இருப்பார்கள். அந்தளவிற்கு ரசிகர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக LAXMAN விளங்கியுள்ளார். 1996ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான LAXMAN , சிறிது காலத்திற்கு தொடக்க வீரராக களமிறங்கினார். பெரிதும் சாதிக்க முடியாததால் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார். பின் 1999ஆம் ஆண்டு இந்திய அணியில் LAXMAN க்கு இடம் கிடைத்தது. அன்று முதல் இந்திய அணியின் பாதுகாவலனாகவே விளங்கி வந்தார். லட்சுமண் புகழின் உச்சிக்கு சென்றது 2001ஆம் ஆண்டு தான். கொல்கத்தாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் போது இந்திய அணி FOLLOW ON  பெற்றது. அப்போது அணியை டிராவிட் உடன் இணைந்து லட்சுமண் காப்பாற்றினார். 281 ரன்கள் விளாசி, அதிக ரன் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை அப்போது படைத்தார் LAXMAN
அதன் பின், என்னற்ற போட்டிகளில், என்னற்ற சூழ்நிலையில் இந்தியாவுக்காக வெற்றிகளை தேடி தந்துள்ளார் லட்சுமண். டெஸ்ட் வீரராகவே அறியப்பட்ட லட்சுமண், 86 ஒருநாள் போட்டியில் விளையாடி 6 சதம், 10 அரைசதம் விளாசியுள்ளார். ரன் ஓடுவதில் வேகம் பற்றவில்லை என்ற ஒரே காரணத்திற்காக லட்சுமணால் ஒருநாள் அணியில் நிரந்தர இடம்பிடிக்க முடியவில்லை. 100 டெஸ்ட்க்கு மேல் லட்சுமண் விளையாடினாலும், ஒரு உலகக் கோப்பை போட்டியில் கூட லட்சுமண் விளையாடியதில்லை. ஓய்வுக்கு பிறகு லட்சுமண் ஐதராபாத்தில் LAXMAN FOUNDATION என்ற அமைப்பை நிறுவி, ஏழை, எளிய குழந்தைகளுக்கு கல்வி, விளையாட்டுக்கான பயிற்சிகளை வழங்கி வருகிறார். LAXMAN ஓய்வு பெற்று 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், அவரது இடத்தை நிரப்ப முடியாமல் இந்திய அணி திணறி வருகிறது. 


கிரிக்கெட் வீரர் டிராவிட்க்கு HALL OF FAME" அந்தஸ்து
கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு வழங்கப்பட கூடிய HALL OF FAME என்ற அந்தஸ்து இந்திய அணியின் முன்னள் கேப்டன் ராகுல் டிராவிட்டுக்கு வழங்கப்பட்டது. திருவனந்தப்புரத்தில் , கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன் நடந்த நிகழ்ச்சியில், சுனிஸ் கவாஸ்கர், HALL OF FAME அந்தஸ்துக்கான நினைவு சின்னத்தை டிராவிட்டிடம் வழங்கினார். 

மேரி கோமுடன் பயிற்சி செய்த மத்திய அமைச்சர்
பிரபல வீராங்கனை மேரி கோமுடன் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர் சிங் குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டார். டெல்லியில் வரும் 15ஆம் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறுகிறது. இதற்காக வீராங்கனைகள் பயிற்சி செய்து வருகின்றனர். இதனை ஆய்வு மேற்கொண்ட மத்திய அமைச்சர் ரத்தேர்ர் சிங், மேரி கோமுடன் குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டார். 

காயம் காரணமாக நடால் விலகல்
காயம் காரணமாக உலகின் முதல் நிலை வீரரான நடால், பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரிலிருந்து விலகினார். இதனால், தரவரிசையில் நம்பர் 1 இடத்தை நடால் இழக்கும் நிலை உருவாகியுள்ளது.

காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு ஸ்வெரேவ் தகுதி
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு நட்சத்திர வீரர் அலெக்சண்டர் ஸ்வெரேவ் தகுதி பெற்றுள்ளார். பாரிஸ் நகரில் நடைபெற்ற 3வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீரர் FRANCIS-ஐ, 6க்கு4,6க்கு4 என்ற செட் கணக்கில் ஸ்வெரேவ் வீழ்த்தினார். 

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் : 4வது சுற்றுக்கு நிஷிகோரி தகுதி
இதே போன்று காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு ஜப்பான் வீரர் நிஷிகோரியும் தகுதி பெற்றுள்ளார். பிரான்ஸ் வீரர் அட்ரியானை எதிர்கொண்ட அவர் 7க்கு5, 6க்கு4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். நிஷிக்கோரி அரையிறுதிக்கு முன்னேறினால் தான், அவரால் உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 




Next Story

மேலும் செய்திகள்