விளையாட்டு திருவிழா - 25.10.2018 - டிராவில் முடிந்த 2வது ஒருநாள் போட்டி
பதிவு : அக்டோபர் 25, 2018, 08:49 PM
விளையாட்டு திருவிழா - 25.10.2018 - இந்திய அணி செய்த தவறுகள்
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி டிராவில் முடிவடைந்தது.கேப்டன் விராட் கோலி தனி ஆளாக நின்று 157 ரன்கள் விளாசினார். இதன் மூலம் கோலி 37வது சதத்தை பூர்த்தி செய்தார். 10 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்த வீரர் என்ற சாதனையும் கோலி படைத்தார். இந்த சாதனைகளை தவிர இந்திய ரசிகர்கள் பெருமைப்படும் எந்த நிகழ்வும் நடைபெறவில்லை. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் HEYTMER, SHAI HOPE அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தனர்.பொதுவாக இரவு நேரங்களில் பனிப்பொழிவு ஏற்படுவதால், அது பந்துவீச கடினமான நேரம். இதை தெரிந்தும் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீசுவதற்கு பதிலாக பேட்டிங்கை தேர்வு செய்தது 2 வேகப்பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்து விளையாடிய இந்திய அணி, இளம் வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமதை நீக்கியது, தவறாக கருதப்படுகிறது, அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ நீக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் போட்டி சமனில் முடிந்ததால், இந்தியா செய்த தவறு தெரியாமல் போய்விட்டது. 

உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மரணக் கிணறு விளையாட்டு 

Death of well... நம் ஊரில் மரணக்கிணறு என்போம் அல்லவா அதே விளையாட்டு தான்...சிறிது கவனம் சிதறினால் கூட, மரணம் நிச்சயம்... அதனால் தான் இதனை மரணக்கிணறு என்றே அழைக்கின்றனர்...வெளிநாடுகளில், இந்த போட்டியை Death  of well, wall of death, silodromes என பல பெயர்களில் அழைக்கின்றனர். ஊர் திருவிழாக்களிலும், சர்க்கஸ்களிலும்  இந்த மரண கிணறு சாகசங்களை பெரும்பாலானோர் பார்த்திருப்போம்... திருவிழா தொடங்குவதற்கு ஒருவாரம் முன்பே பல இரும்பு கம்பிகள் இணைப்போடு, மரப்பலகைகள் வைத்து மரண கிணற்றை அமைக்க தொடங்கி விடுவார்கள்...  அதில் உயிரை பணயம் வைத்து  சுற்றிக்கொண்டே சாகசங்கள் செய்து மக்களை மகிழ்விப்பர்...
ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் கூட இந்த சாகசங்களை சர்வ சாதாரணமாக செய்து முடிக்கின்றனர். தட தடவென வீரர்கள் சுற்றும் வேகத்தில், வீரர்களை விட பார்வையாளர்களுக்கு தான் பதற்றமும் பயமும் தொற்றி கொள்கின்றது...நம் ஊரில், சாகசத்தை காணச்செல்லும் முன்பே அனுமதி சீட்டு பெற வேண்டும்...  ஆனால் வெளி நாடுகளில், வீரர்களின் திறமைக்கு ஏற்றவாறு பார்வையாளர்கள் பணத்தை நீட்டுவார்கள் , சாகசம் செய்யும் வீரர், பணத்தை கையில் இருந்து பறித்துகொண்டு செல்வார்... பங்கேற்க அசாத்திய பயிற்சி அவசியம்... ஒரு வீர‌ர் சிறிய தவறு இழைத்தால் கூட, சுற்றியுள்ள பலர் படுகாயம் அடைய வாய்ப்புண்டு... இந்த சாகச முயற்சியில் பல வீர‌ர்கள் உயிரிழந்துள்ளனர்.தற்போதைய நாட்களில், இந்த சாகச போட்டிகள், கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருகிறது...  செல்போன்களில் மூழ்கி கிடக்கும் இக்காலத்து மக்கள், இவர்களின் சாகசங்களை காண ஆர்வம் காட்டுவதில்லை...  

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.