விளையாட்டு திருவிழா (23.10.2018) - பிரபல மல்யுத்த வீரர் ரோமன் ரெய்ன்ஸ்க்கு புற்றுநோய்
பதிவு : அக்டோபர் 23, 2018, 08:38 PM
விளையாட்டு திருவிழா (23.10.2018) - பிரபல மல்யுத்த வீரர் ரோமன் ரெய்ன்ஸ், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல மல்யுத்த வீரர் ரோமன் ரெய்ன்ஸ், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். WWE எனப்படும் 'பொழுது போக்கு' மல்யுத்த தொடரில் களமிறங்கி உலக புகழ் பெற்றவர் ரோமன் ரெய்ன்ஸ். 

கடந்த 6 ஆண்டுகளாக WWE பொழுதுப்போக்கு தொடரில் பங்கேற்று, THE ROCK. STONE GOLD. THE UNDERTAKER. JOHN CENA போன்ற வீரர்களின் வரிசையில் இடம்பிடித்தார் ரோமன் ரெய்ன்ஸ்..தனது அதிரடி சண்டையாலும், மலைப் போன்ற தோற்றத்ததாலும் 2000 KIDS ஐ கட்டிப்போட்டவர். 

30 ஆண்டுகளாக இயங்கி வரும் WWE பொழுதுப்போக்கு தொடரின் அடுத்த நட்சத்திரமாக விளங்கி வந்த ரோமன் ரெய்ன்ஸ், தற்போது  ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். , இனி மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று கூறி அவர் போட்டியிலிருந்து விலகினார். இந்த செய்தியை கேட்டு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  சிறு வயதிலே அவருக்கு இந்த நோய் இருந்துள்ளது. ஆனால் அதிலிருந்து மீண்டு, கடும் உழைப்பால் உலக புகழ்பெற்றார். 

ஆனால் மீண்டும் ரத்த புற்றுநோய் அவருக்கு ஏற்பட்டுள்ளதால், மீண்டும் தீவிர சிகிச்சை பெற உள்ளார்.  தமக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் ரோமன் ரெய்ன்ஸ் கூறியுள்ளார்.  ரோமன் ரெய்ன்ஸ் நலமுடன் திரும்ப வேண்டும் என்று பிரபல மல்யுத்த வீரர் JOHN CENA , வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இந்தியா Vs மே.இ.தீவுகள்- நாளை 2வது ஒருநாள் : இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா?

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.

முதல் போட்டியில் வென்ற உத்வேகத்துடன் நாளைய போட்டியில் இந்தியா களமிறஙகுகிறது.

இந்திய அணி பேட்டிங்கில் அசுர பலத்தில் இருந்தாலும், சில குறைகள் இல்லாமல் இல்லை. புவனேஸ்வர்குமார், பும்ரா இல்லாத தருணத்தில் முகமது ஷமி, உமேஷ் யாதவ் சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் ஒருநாள் போட்டியில் இவர்களின் பந்துவீச்சு எடுப்படவில்லை. குறிப்பாக கடைசிக்கட்ட ஓவர்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கினர். இதனால் அனுபவ வீரர்களாக உள்ள முகமது ஷமி, உமேஷ் யாதவ் செய்த தவறை, நாளைய போட்டியி திருத்திக் கொள்ள வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். 

குல்தீப் யாதவ் அணியிலிருந்து நீக்கப்பட்டு ஜடேஜாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டதற்கு முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஜடேஜா நாளை போட்டியில் பங்கேற்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரை முதல் 3 வீரர்களே பெரும்பாலும் பேட்டிங் செய்வதால், மற்ற வீரர்கள் அவர்களது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பே கிடைக்காமல் போய்விடுகிறது. 

போட்டியின் போது இரவு நேரங்களில் பனிப்பொழிவு இருப்பதால், டாஸ் வென்று முதலில் பந்துவீசுபவர்களுக்கே சாதகமான சூழல் உள்ளது

மேற்கிந்தியத் தீவுகள் அணி வரை முதல் போட்டியில் 300 ரன்களுக்கு மேல் குவித்ததால், அந்த அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. விசாகப்பட்டினம் மைதானம் சிறிய மைதானம் என்பதால் நாளைய போட்டியிலும் ரசிகர்கள் ரன் விருந்தை எதிர்பார்க்கலாம்.. 

அமெரிக்க ஃபார்முலா ஓன் கிராண்ட் பிரீ கார் 

அமெரிக்காவில் நடைபெற்ற ஃபார்முலா ஓன் கிராண்ட் பீரி கார் பந்தயத் தொடரின் சாம்பியன் பட்டத்தை பின்லாந்து வீரர் KIMI RAIKONNEN வென்றார்.

டெக்சாஸ் மாகாணம் ஆஸ்டின் நகரில் நடைபெற்ற இந்த பந்தயத்தை வென்று உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிவிடலாம் என்ற உத்வேகத்தில் ஹாமில்டன் களமிறங்கினார்.ஆனால் அது நடைபெறவில்லை. 

போட்டியில் 18வது இடத்திலிருந்து நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டேப்பன் தொடங்கினார். நெர்த்தியாக செயல்பட்ட அவர், பந்தயத்தை 2வது இடத்தில் நிறைவு செய்தார்

நட்சத்திர வீரர் ஹாமில்டன் 3வது இடத்தையும் 15 வது இடத்தில் இருந்த 4 முறை உலக சாம்பியனான செபாஸ்டியன் வெட்டல், 4வது இடத்தையும் பிடித்தனர். உலக சாம்பியன்ஷிப் பட்டியலில் ஹாமில்ட்ன் முதலிடத்திலும், விட்டல் 2வது இடத்திலும் உள்ளனர். இன்னும் 3 சுற்றுகள் எஞ்சிய நிலையில், இரு வீரர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது

அமெரிக்க பார்முலா ஓன் பந்தயத்தை வென்ற KIMI RAIKONNEN க்கு வயது 39 ஆகும். இவர் கடைசியாக 2013 ஆம் ஆண்டு ஆஸதிரேலியன் கிராண்ட் பீரி பந்தயத்தை வென்றார். 2வது இடத்தை பிடித்த வெர்ஸ்டேப்பன், பார்முலா ஓன் தொடரின் நாளைய நட்சத்திரமாக கருதப்படுபவர். ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.