விளையாட்டு திருவிழா (22.10.2018) - 246 ரன்கள் சேர்த்த கோலி, ரோஹித் ஜோடி
பதிவு : அக்டோபர் 22, 2018, 08:45 PM
விளையாட்டு திருவிழா (22.10.2018) - மே.இ.தீவுகளை பந்தாடிய இந்திய அணி
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 50 ஓவர் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 322 ரன்கள் குவித்தது. இந்த இலக்கை இந்திய அணி வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 42 புள்ளி 1வது ஓவரிலே வெற்றி இலக்கை எட்டியது. ரோஹித் சர்மா அதிகபட்சமாக 152 ரன்களும், கேப்டன் கோலி 140 ரன்களும் விளாசினர். இந்த ஜோடி 246 ரன்களை சேர்த்துள்ளது. இதன் மூலம் கோலி, ரோஹித் சர்மா ஜோடி 5 முறை 200 ரன்களுக்கு மேல் பார்டனர்ஷிப் சேர்த்துள்ளதுரோஹித் சர்மா 152 ரன்கள் குவித்தன் மூலம் , ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை 150 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.அதிவேகமாக 20 சதங்களை எட்டிய 3வது வீரர் என்ற பெருமையையும் ரோஹித் சர்ம பெற்றார்.தொடர்ந்து மூன்று ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட்டில் 2 ஆயிரம் ரன்களை கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை விராட் கோலி படைத்தார்.மேலும் அதிக சதம் விளாசிய கேப்டன்கள் பட்டியலில் விராட் கோலி தற்போது 2வது இடத்தை பிடித்துள்ளார். 

யார் இந்த மைக் டைசன்...??

மைக் டைசன்..  குத்துச்சண்டை களத்தின் இரும்பு மனிதன் என்று ரசிகர்களால் போற்றப்பட்டவர்.. குத்துச்சண்டை விளையாட்டை வேறு ஒரு தளத்திற்கு எடுத்து சென்றவர். 

1966ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி மைக் டைசன்.. 
பிறந்தார். டைசன் 10 வயது இருக்கும் போது, அவரது தந்தை குடும்பத்தை விட்டுவிட்டு ஓடி விட்டார்.  அடுத்த 6 ஆண்டுகளில் டைசனின் தாயும் இறந்தார். 

தாய், தந்தை அரவணைப்பு இல்லாமல், டைசன் ஒரு அடாவடி குழந்தையாகவே வளர்ந்தார். தெருச் சண்டை, திருட்டு என தனது குழந்தை பருவத்தில் 38 முறை சிறை சென்றுள்ளார் டைசன். 

சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் இருந்த டைசனின் சண்டை திறமையை அடையாளம் கண்ட பயிற்சியாளர் BOBBY STEWART அவருக்கு பயிற்சி அளித்து தொழில்முறை குத்துச்சண்டை வீரராக மாற்ற, CONSTATINE AMATO விடம் டைசனை அறிமுகப்படுத்தினார்.

அந்த சந்திப்பு, டைசனின் வாழ்க்கையே மாற்றியது. தெருக்களில் சண்டை போட்ட டைசன், அதன் பின் குத்துச்சண்டை களத்தில் சண்டையிட்டார்.

அதிரடி, ஆக்கோரஷத்தை மட்டுமே தனது ஆயுதமாக பயன்படுத்திய டைசன், குத்துச்சண்டை விளையாட்டில் மாபெரும் சக்தியாக விளங்கினார். 

முதல் 19 போட்டிகளில் எதிராளியை நாக் அவுட் செய்து வென்றார் மைக் டைசன், இதில் 12 போட்டிகளில் முதல் சுற்றிலே வென்றார் டைசன்..

தனது 20 வது வயதில் HEAVY WEIGHT பட்டத்தை வென்ற மைக் டைசன், சிறுவயதிலேயே அந்த பட்டத்தை வென்றவர் என்ற உலக சாதனையை படைத்தார். 

தொடர்ந்து 10 முறை, HEAVY WEIGHT பட்டத்தை வென்ற டைசன், தனது 38வது போட்டியில் முதல் முறையாக தோல்வியை சந்தித்தார். 

1991வது ஆண்டு மைக் டைசன், பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கினார். உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அந்த வழக்கில் மைக் டைசன், சிறை சென்றார். 

மூன்றரை ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிற்கு மீண்டும் குத்துச்சண்டை களத்திற்கு திரும்பிய டைசன், HEAVYWEIGHT பட்டத்தை வென்றார்.  2006 ஆம் ஆண்டு டைசன் குத்துச்சண்டையிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 
58 போட்டிகளில் களமிறங்கி 50 போட்டிகளில் டைசன் வென்றுள்ளார். ஓய்வுக்கு பிறகு டைசன் பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மைக் டைசனின் பலவீனமே கோவம், ஆக்கோரஷம் மட்டும் தான், ஆனால், அதையே அவர் பலமாக மாற்றி , சிறந்த குத்துச்சண்டை வீரராக திகழ்ந்தார்

தொடர்புடைய நிகழ்ச்சிகள்

விளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஒருநாள் கிரிக்கெட் நாளை தொடக்கம் : டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்க்குமா ஆஸி?

விளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் விளையாட பி.சி.சி.ஐ. தடை

70 views

விளையாட்டு திருவிழா - 20.11.2018 - இந்தியா Vs ஆஸி. நாளை முதல் டி-20 போட்டி

விளையாட்டு திருவிழா - 20.11.2018 - வெற்றியுடன் தொடரை தொடங்குமா இந்தியா?

38 views

விளையாட்டு திருவிழா - 16.11.2018 - ஐ.பி.எல் - நீக்கப்பட்ட வீரர்களின் விவரம்

விளையாட்டு திருவிழா - 16.11.2018 - ஐ.பி.எல். 12வது சீசனில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் டிசம்பரில் நடைபெறுகிறது.

37 views

விளையாட்டு திருவிழா - 25.10.2018 - டிராவில் முடிந்த 2வது ஒருநாள் போட்டி

விளையாட்டு திருவிழா - 25.10.2018 - இந்திய அணி செய்த தவறுகள்

122 views

பிற நிகழ்ச்சிகள்

விளையாட்டு திருவிழா - (14.01.2019) : இந்தியா ஆஸி நாளை 2வது ஒருநாள் போட்டி

விளையாட்டு திருவிழா - (14.01.2019) : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்

100 views

விளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஒருநாள் கிரிக்கெட் நாளை தொடக்கம் : டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்க்குமா ஆஸி?

விளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் விளையாட பி.சி.சி.ஐ. தடை

70 views

விளையாட்டு திருவிழா - (10.01.2019) : இந்தியா Vs ஆஸி. ஒருநாள் போட்டி : நாளை மறுநாள் சிட்னியில் தொடக்கம்

விளையாட்டு திருவிழா - (10.01.2019) : ஆசிய கோப்பை கால்பந்து தொடர்: இந்தியா Vs யு.ஏ.இ. இன்று மோதல்

41 views

விளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்திய வீரர்களின் செயல்பாடு எப்படி?

விளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்தியாவிலேயே நடைபெறுகிறது ஐ.பி.எல் போட்டி

43 views

விளையாட்டு திருவிழா - (08.01.2019) : டெஸ்ட் தரவரிசை புஜாராவுக்கு 3வது இடம்

விளையாட்டு திருவிழா - (08.01.2019) : புதிய உச்சம் தொட்ட ரிஷப் பண்ட்

29 views

விளையாட்டு திருவிழா - (07.01.2019) : ஆஸி. மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை

விளையாட்டு திருவிழா - (07.01.2019) : டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.