விளையாட்டு திருவிழா (18.10.2018) - இளையோருக்கான ஒலிம்பிக் போட்டி
பதிவு : அக்டோபர் 18, 2018, 08:43 PM
விளையாட்டு திருவிழா (18.10.2018) - இளையோருக்கான ஒலிம்பிக் தொடரில் கலப்பு இரட்டையருக்கான டைவிங் போட்டி நடைபெற்றது.
விளையாட்டு திருவிழா (18.10.2018)

கராத்தே போட்டியில் ஜப்பான் வீர்கள் ஆதிக்கம் செலுத்தினர். மகளிர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை கொக்கரோ தங்கம் வென்றார். 

52 கிலோ எடைப் பிரிவில் எகிப்துக்கு தங்கம்

52 கிலோ எடைப் பிரிவில் எகிப்துக்கு தங்கமும், ஜப்பான் வீராங்கனைக்கு வெள்ளிப் பதக்கமும் கிடைத்தது


61 கிலோ எடைப்பிரிவில் சவுதிக்கு தங்கம்

61 கிலோ எடைப் பிரிவில் ஜப்பான் வீரரை வீழ்த்தி, சவுதி அரேபிய வீரர் முகமது தங்கம் வென்றார். ஆடவருக்கான கூடைப்பந்து போட்டி அர்ஜென்டினா அணி தங்கம் வென்றது.

மகளிர் கூடைப்பந்து அமெரிக்காவுக்கு தங்கம்

மகளிர் கூடைப்பந்து போட்டியில் பிரான்ஸ் அணியை 18க்கு4 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அமெரிக்க அணி தங்கம் வென்றது. 

உடல் பருமனால் கணவரால் ஒதுக்கப்பட்ட பெண்

சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் ரூபி பியூட்டி. இவர் 6 வயது மகனின் தாய். தனது உடல் பருமனான காரணத்தால் தன்னுடைய கணவருக்கு தன் மீது பற்று இல்லாமல் பிரிந்து சென்றுவிட்டதாக தெரிவிக்கிறார்.

உடல் எடையை காரணம் காட்டி அவமானப்படுத்தப்பட்ட அவர்,  அப்போதுதான் தன்னுடைய நிலையை உணர்ந்திருக்கிறார். குண்டாக இருந்ததால் மிகவும் சங்கடத்திற்கு உள்ளான ரூபி தன்னுடைய கவனத்தை உடற்பயிற்சியின் மீது திருப்பியிருக்கிறார்.

ஆரம்பத்தில் உடல் எடையை குறைக்க வாக்கிங் சென்று இருக்கிறார். தொடர்ந்து உடற்பயிற்சி மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக பாடி பில்டிங்கில் கவனம் செலுத்தினார்.கடின உழைப்பின் பயனாக தற்போது அசாமில் நடந்த தேசிய அளவிலான பாடி பில்டிங் போட்டியில் கலந்து கொண்டு முதல் இடம் பிடித்திருக்கிறார்.

இவர் மிஸ் சென்னையாகவும் தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாடிபில்டிங் துறையில் தமிழகத்தில் இதுவரை பெண்கள் எவரும் சாதித்ததில்லை என்ற நிலையில், ரூபியின் சாதனை பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாடி பில்டிங்கில் பெண்கள் அதிக அளவில் ஈடுபடாமல் இருப்பது குறித்து வருத்தம் தெரிவிக்கும் ரூபி, தாய்மையின் காரணமாக ஏற்பட்ட உடல் எடை அதிகரிப்பை விமர்சிப்பது தாய்மையை அவமதிப்பது போன்றது என்று ஆதங்கப்படுகிறார்.

அந்த அவமானத்தை எல்லாம் சகித்துக்கொண்டு தேசிய அளவில் சாதனை படைத்திருக்கும் ரூபி பியூட்டி, சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கெல்லாம் முன்னுதாரணமாகி இருக்கிறார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.