விளையாட்டு திருவிழா - 02.10.2018 - முச்சதம் விளாசிய வீரருக்கு அணியில் இடமில்லை

முச்சதம் விளாசிய வீரருக்கு அணியில் இடமில்லை,கருண் நாயருக்கு வந்த சோதனை
விளையாட்டு திருவிழா - 02.10.2018 - முச்சதம் விளாசிய வீரருக்கு அணியில் இடமில்லை
x
கருண் நாயர்.. இந்திய அணியில் இடம்பெற்று ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த வீரர்.. யார் அந்த கருண் நாயர் என்று ரசிகர்கள் கூகுளில் தேடி பார்த்த அளவிற்கு சாதனை படைத்தவர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக்கிற்கு பிறகு முச்சதம் விளாசிய ஒரே இந்திய வீரர்.. இத்தகைய சாதனை படைத்த கருண் நாயர் அடுத்த டெஸ்ட் போட்டியில் மைதானத்தில் விளையாடும் வீரர்களுக்கு தண்ணீர் எடுத்து வரும் பணியை சென்றார்.

நடுவரிசையில் திறமையான வீரர்கள் கிடைத்து விட்டார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், கருண் நாயரை சரியாக பயன்படுத்தாமல் சொதப்பிய பெருமை கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரிக்கே சேரும்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தேர்வு செய்யப்பட்ட கருண் நாயர் , ஒரு போட்டியில் கூட விளையாட அணி நிர்வாகம் வாய்ப்பு தரவில்லை. மாறாக நான்காவது டெஸ்ட்டில் விஹாரி என்ற இளம் வீரரை இந்தியாவிலிருந்து அழைத்து வந்து வாய்ப்பு தந்தது அணி நிர்வாகம். ஆனால் கருண் நாயர் வெறும் பேஞ்சை மட்டுமே தேய்த்து கொள்ள பயன்படுத்தப்பட்டார். 

இதற்கும் மேலாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து கருண் நாயர் நீக்கப்பட்டார். முச்சதம் விளாசிய வீரரை கடந்த ஒரு ஆண்டாக அணியில் இடம் தராமல், வெளியே உட்கார வைக்கப்பட்டதற்கு யார் பொறுப்பு ஏற்க போகிறார்கள் என்று கிரிக்கெட் விமர்சகர் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் இது குறித்து கருண்நாயரிடம் கேட்டதற்கு அவர் கூறியது என்ன தெரியுமா..?? அணி நிர்வாகத்தின் முடிவில் நாளை தலையிட முடியாது என்றும், என் பேட்டிங் மூலம் அவர்களை கவர முயற்சிப்பேன் என்பது தான்.. `

பிரான்ஸ் மோட்டார் சூப்பர் பைக் தொடர்

பிரான்ஸில் நடைபெற்ற மோட்டார் சூப்பர் பைக் தொடரின் சாம்பியன் பட்டத்தை பிரிட்டன் வீரர் JOHNATHAN REA கைப்பற்றினார். MAGNY COURS பந்தயத் தளத்தில் நடைபெற்ற இந்த பந்தயத்தில் பிரிட்டன் வீரர் டேவிஸ்சின் கையே ஓங்கி இருந்தது.

அப்போது, டேவிஸ் மற்றும் ஜோனத்தன் ரே, மைக்கோல் வான் ஆகியோருக்குள் கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில், செக்குடியரசு வீரர் ஜாக்கப், விபத்தில் சிக்கி போட்டியிலிருந்து வெளியேறினார். 

11வது சுற்றுக்கு பிறகு, நட்சத்திர வீரர் ஜோனத்தன் ரே, முதலிடத்திற்கு முந்தி சென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் தொடர்ந்து 8வது முறையாக ஜோனத்தன் ரே,பட்டத்தை கைப்பற்றினார். 

அலைச்சறுக்கில் சாதனை படைத்த வீராங்கனை

அலைச்சறுக்கு போன்ற சாகசங்களில் ஆண்களுக்கு நிகராக தற்போது பெண்களும் பல சாதனை படைத்து வருகின்றனர். பிரேசிலை சேர்ந்த வீராங்கனை MAYA GABREIA. 31 வயதான இவர், கடந்த ஜனவரி மாதம் போர்ச்சுகலில் அலைச்சறுக்கு சாகசத்தை மேற்கொண்டார்.

சுமார் 68 அடி உயரம் எழுந்த அலையில் மாயா , அலைச்சறுக்கில் ஈடுபட்டார். சுனாமி போன்று எழுந்த அலை மாயாவை விழுங்கிவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், மாயா, கீழே விழாமல் அலைச்சறுக்கை வெற்றிக்கரமாக முடித்தார். 

மாயாவின் இந்த சாகசத்தை ஆய்வு செய்த கின்னஸ் நிறுவனம், இதனை உலக சாதனையாக அறிவித்தது.  மாயா 2013ஆம் ஆண்டு இது போன்ற சாகசத்தை மேற்கொள்ள முயற்சி செய்த போது, அலையில் சிக்கி சுயநினைவின்றி மீட்கப்பட்டார். எனினும் வாழ்க்கையில் சறுக்கலை கண்டாலும், அலைச்சறுக்கை விடுவதில்லை என்று பல பயிற்சியை மேற்கொண்ட பிறகு, 5 ஆண்டுகளுக்கு பிறகு உலா சாதனையை மாயா நிகழ்த்தினார். மன உறுதியும், விடா முயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் சாதிக்கலம் என்று கூறும் மாயா, தனது சாதனைக்கு பயிற்சியாளர் மற்றும் காதலனே காரணம் என்றும் கூறுகிறார்.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர்


5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 3 ஆவது போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைட்ட் அணியும், எஃப்சி  கோவா அணியும் மோதின. கௌஹாத்தியில் ஆட்டம் தொடங்கிய உடனேயே சூடு பிடித்தது. ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பை நார்த் ஈஸ்ட் அணி கோலாக மாற்றியது. 
 
இதையடுத்து கோல் கணக்கை சமன் செய்ய கடுமையாக போராடிய கோவா அணியின் வீரர் ஃபெரோன் கோரோமினாஸ்  14 ஆவது நிமிடத்தில் அற்புதமாக ஒரு கோல் அடிக்க. 1 - 1 என்ற கணக்கில் போட்டி சமநிலையில் இருந்தன.
  
தொடர்ந்து 39 ஆவது நிமிடத்தில்  கோவா அணியின் வீரர் ஃபெரோன் கோரோமினாஸ்  மீண்டும் ஒரு ஒரு கோல் அடித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
 
 இதையடுத்து முதல் பாதி ஆட்டத்தில் 2 -1 என்ற கோல் கணக்கில் கோவா அணி முன்னிலையில் உள்ளது. இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியதும் இரு அணி வீர்களும் விறுவிறுப்பில்லாமல் விளையாடினர். 
 
ஆனால் ஆட்டத்தின் 53 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் பர்த்லோமி ஒபிச்சே அழகான கோல் ஒன்றை அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்

இதனைத் தொடர்ந்து  எந்த அணியுமே கோல் போட முடியவில்லை. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணி மற்றும்  எஃப்சி  கோவா அணிக்கு இடையே நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டம் டிராவில் முடிந்தது.
 

தோனி மட்டுமே வெற்றியை தேடி தருவாரா?

தோனி மட்டுமே அனைத்து போட்டிகளிலும் வெற்றியை தேடி தருவார் என்று எண்ணிவிடக் கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கும்ப்ளே தெரிவித்துள்ளார். போட்டியை வெற்றிக்கரமாக முடிக்க இளம் வீரர்களை இந்தியா கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கும்ப்ளே கருத்து தெரிவித்துள்ளார். 




Next Story

மேலும் செய்திகள்