விளையாட்டு திருவிழா - 17.09.2018 - வாழ்வா? சாவா? ஆட்டத்தில் இலங்கை அணி
பதிவு : செப்டம்பர் 17, 2018, 08:48 PM
விளையாட்டு திருவிழா - 17.09.2018 - திரும்பி வந்து கலக்கிய மலிங்கா
விளையாட்டு திருவிழா - 17.09.2018 
 
இலங்கைக்கு அதிர்ச்சி அளிக்குமா ஆப்கான்
இலங்கைக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் எதிரான முக்கிய லீக் ஆட்டம் தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இலங்கை இருக்கு. பலம் வாய்ந்த அணியாக வலம் வந்த இலங்கை, தில்ஷான், சங்கக்காரா, ஜெயவர்த்தனே உள்ளிட்ட வீரர்களின் ஓய்வு பெற்ற பிறகு, இலங்கை பலவீனம் அணியாக கருதப்படுது. இலங்கை அணியின் உள்ள இளம் வீரர்கள் குஷல் மெண்டிஸ், குஷல் பெரேரா உள்ளிட்டவர்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே இலங்கையால் வெற்றி பெற முடியும். இலங்கை அணி தற்போது கேப்டன் மேத்தீயூஸ் மட்டுமே நம்பி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டி இருக்கு.  ஆப்கானிஸ்தான் அணியோ பழைய பாகிஸ்தான் டீம் மாதிரி PERFORM பண்றாங்க. முக்கியமா அந்த அணியோட சுழற்பந்து நல்ல ஸ்ட்ராங்கா இருக்கு. ரஷித் கான் முஜிப் ரஹ்மான் இருவரும் கட்டுக்கோப்பா பந்துவீசினால் எப்படிப்பட்ட அணியையும் வீழ்த்த முடியும். ஆப்கானிஸ்தான் பேட்டிங்ககில் மட்டும் கான்சென்டிரேட் பண்ணா பெரிய அணிகளுக்கும் சவால் அளிக்க முடியும். இதுவரை ஒருநாள் போட்டியில ஆப்கானிஸ்தானும் இலங்கையும் 2 முறை மோதியிருக்காங்க. அதில் 2 போட்டியிலும் இலங்கை வெற்றி பெற்று இருக்கு.

வங்கதேசத்தின் "விராட் கோலி"  ரஹிம்
MUSFIQUR RAHIM வங்கதேச அணியின் விராட் கோலி என்று அந்நாட்டு பத்திரிகை புகழ்ந்து தள்ளும் பெருமைக்குரியவர். ஆடுகளத்தில் ரஹிமின் செயல்பாடு எதிரணி ரசிகர்களை வெறுப்பேற்றும் என்பது உண்மையே. ஆனால் இந்த வால்பையினின் திறமைக்கு ரசிகர்கள் அவ்வப்போது கைதட்டியே வருகின்றனர். ஆசிய கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் தனி ஆளாக நின்று வங்கதேசத்துக்கு வெற்றி வாகை தேடி தந்தது அவர திறமைக்கு ஒரு சான்று. வங்கதேச அணி எப்போது எல்லாம், சரிவை நோக்கி செல்கிறதோ, அப்போது எல்லாம் பாகுபலியை போல் அணியை தோளில் சுமந்து செல்வதை ரஹிம் வாடிக்கையாவே கொண்டுள்ளார்.  இதே போன்று ஒரு கட்டத்தில் தான் இந்தியாவுக்கு எதிராக சதம் விளரிசினார் ரஹிம். ஒருநாள் போட்டியில் இதுவரை 6 சதம் விளாசியுள்ள ரஹிம், 31 வயதை எட்டிவிட்டார் என்று சொன்னால் வங்கதேச ரசிகர்களே நம்ப மாட்டார்கள். 

திரும்பி வந்து கலக்கிய மலிங்கா
Lasith Malinga இது போன்ற ஒரு வேகப்பந்துவீச்சாளர் நமது அணியில் இல்லையே என்று கிரிக்கெட் ரசிகர்கள் ஆதங்கம் படுவார்களே தவிர இவரை வெறுப்பது இல்லை. உச்சம் தொட்ட மலிங்காவை ரசிகர்கள் கண்டு இருப்பார்கள். ஆனால், மலிங்கா, காயம் காரணமாக கடந்த ஒரு ஆண்டாக இலங்கை அணியிலே இடம்பெறவில்லை.  இந்த நிலையில், திடீரென்று ஆசிய போட்டியில் மலிங்காவின் பெயர் இடம்பெற்றது. பார்மில் இல்லாத மலிங்கா என்ன செய்யப்போகிறார் என்று நினைத்த போது தான், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 23 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். பழைய மலிங்காவை கண்டது இலங்கை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், இந்த பார்மை அவர் தொடர்ந்தார், நிச்சயம் இலங்கை வேகப்பந்துச்சுக்கு புது உத்வேகத்தை அளிக்கும். 

ஜுவண்டஸ்க்கு முதல் கோல் அடித்த ரொனால்டோ
ஜுவண்டஸ் அணிக்காக களமிறங்கிய நட்சத்திர வீரர் ரொனால்டோ தனது முதல் கோலை அடித்தார். கால்பந்து உலகில் அதிக ரசிகர்களை உடையே வீரர்களில் ஒருவரான ரொனால்டோ, ரியல் மாட்ரிட் அணியிலிருந்து விலகி, இத்தாலியை சேர்ந்த ஜூவண்டஸ் அணிக்காக களமிறங்கினார். ஜூவண்டஸ் அணிக்காக களமிறங்கி முதல் 3 போட்டிகளில் ரொனால்டோ கோல் அடிக்காமல் ரசிகர்களை ஏமாற்றினார். இந்நிலையில் டுரின் நகரில் நடைபெற்ற SASSUALO அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில் சமனில் முடிந்தது. போட்டியின் 50வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ எளிதாக் கோல் அடித்து ஜூவண்டஸ் அணிக்கு முதல் கோலை அடித்தார். இதனைத் தொடர்ந்து 65வது நிமிடத்திலே ரொனால்டோ 2வது கோல் அடித்து அணியின் வெற்றிக்கு விததிட்டார். இந்தப் போட்டியின் போது ஜூவண்டஸ் வீரர் கோஸ்டா எதிரணி வீரரை தலையால் முட்டினார். இதற்கு அவருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.  இதன் பின்னர் சண்டை ஏற்பட்டதால் கோஸ்டா எதிரணி வீரர் மீது எச்சில் தூப்பினார். இதனால் அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

உலக மோட்டார் ​சைக்கிள் பந்தயம் 
உலக அளவிலான சூப்பர் மோட்டார் சைக்கிள் போட்டியின் பத்தாவது சுற்று போர்ச்சுகலில் நடைபெற்றது.  கார் பந்தய தளமான அல்கர்வில் நடைபெற்ற  இந்த போட்டியில் அயர்லாந்தை சேர்ந்த ஜோனாதன் ரீ வெற்றி பெற்றார். இதன் மூலம் ஜோனாதன் ரீ மொத்தம் 420 புள்ளிகள் பெற்றுள்ளார். இந்த தொடரில் இன்னும் மூன்று கட்ட போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் அடுத்த கட்ட போட்டி அர்ஜென்டினாவில் நடைபெறவுள்ளது. 

கேல் ரத்னா விருதை வெல்லப்போவது யார்?
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பெயர் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதை மத்திய அரசு ஏற்று கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் விராட் கோலியின் பெயரை கேல் ரத்னா விருதுக்கு பி.சி.சி.ஐ. பரிந்துரை செய்தது. கோலியுடன் இறுதிப் பட்டியலில் பளுதூக்குதல் மீராபாய் சானு, பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி பெயரும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மணிஷ், ராயுடு இந்திய அணியின் முக்கிய வீரர்கள்
இந்திய அணிக்கு மணிஷ் பாண்டேவும், அம்பத்தி ராயுடுவும் திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.  துபாயில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மிணிஷ் பண்டே மற்றும் அம்பத்தி ராயுடு இந்திய அணியின் முக்கியமான வீரர்கள் என்றும் ரோஹித் குறிப்பிட்டார். 

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் - இறுதிச் சுற்றுக்கு குரோஷிய அணி தகுதி
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதிச் சுற்றுக்கு குரோஷிய அணி தகுதி பெற்றுள்ளது. சாடார் நகரில் நடைபெற்ற உலக குரூப் அரையிறுதி ஆட்டத்தில் குரோஷியாவும் அமெரிக்காவும் மோதின. வெற்றியை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் குரோஷியாவின் இளம் வீரர் போர்னா கொரிச் வெற்றி பெற்றார். இதன் மூலம் 11 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் அமெரிக்காவின் கனவு பறிபோனது. ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.