விளையாட்டு திருவிழா - 14.09.2018 - ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்

விளையாட்டு திருவிழா - 14.09.2018 -ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கும் நிலையில் அந்த தொடர் குறித்து தற்போது காணலாம்.
விளையாட்டு திருவிழா - 14.09.2018 - ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்
x
விளையாட்டு திருவிழா - 14.09.2018

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் சனிக்கிழமை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.  23 ஆண்டுகளுக்கு பிறகு துபாயில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான்,இலங்கை,வங்கதேசம்,ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் பங்கேற்கின்றன. 6 அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் பாகிஸ்தான், ஹாங்காங்குடன் நடப்பு சாம்பியனான இந்தியா இடம்பெற்றுள்ளது. பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளும் இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவுகளில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள், SUPER 4 என்ற அடுத்த சுற்றுக்கு முன்னேறும். ரவுண்ட் ராபின் முறைப்படி நடைபெறும் இந்தச் சுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி, இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். இறுதிப் போட்டி வரும் 28ஆம் தேதி நடைபெறுகிறது. இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் வரும் 18ஆம் தேதி ஹாங்காங்குடன் மோதுகிறது. ஓய்வு ஏதுமின்றி  அடுத்த நாளே பெரிதும் எதிர்பார்க்கப்படும், இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுகின்றன. இதுவரை ஆசிய கோப்பை தொடர் 13 முறை நடந்துள்ளது. அதில் இந்தியா 6 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஆசிய போட்டியில் அதிக ரன் விளாசியவர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இலங்கை வீரர் ஜெயசூரியா, அதிக விக்கெட் டுகள் வீழ்த்தியவர் என்ற பெருமையை முரளிதரன் பெற்றுள்ளார். ஆசிய போட்டியில் இந்தியா இதுவரை 48 போட்டிகளில் விளையாடி 31 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. 16 போட்டிகளில் தோல்வியை கண்டுள்ளது.

ஆசிய கோப்பை - இந்திய அணி ஒரு பார்வை
2018ஆம்  ஆண்டு ஆசிய கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ள அணியாக கருதப்படுவது இந்தியா தான்.

விராட் கோலி அணியில் இல்லை என்பது பெரும் பின்னடைவு என்றாலும் கூட, பல திறமையான இளம் வீரர்கள் பெரிய தொடரில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை அறிய ஆசிய கோப்பை நல்ல களமாக அமையும். அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்கு அணியை தயார் படுத்தவும் ஆசிய கோப்பை தொடர் நல்ல வாய்ப்பை அளிக்கும். ஆசிய போட்டியில் கேப்டன் பொறுப்பேற்று இருப்பது ரோஹித் சர்மா தான். ரோஹித் சர்மா கேப்டனாக எப்போதுமே ருத்ரதாண்டவம் ஆடுவார் என்பது அனைவரும் அறிந்தேதே. டெஸ்ட் போட்டியில் சொத்ப்பிய தவான். ஒரு நாள் போட்டியில் தனது திறமையை மீண்டும் நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோலிக்கு பதில் நல்ல பார்மில் உள்ள மணிஷ் பாண்டே களமிறங்கலாம். ஆஸ்திரேலியா ஏ, தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக மணிஷ் பாண்டே சிறப்பாக விளையாடினார் என்பது கவனிக்கவேண்டியது. ஐ.பி.எல். தொடரில் கலக்கிய அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ், உள்ளிட்டோர் நடுவரிசையில் கோலி இல்லாத குறையை தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தோனி, ஹர்திக் பாண்டியாவுக்கும் பேட்டிங்கில் ஜொலிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. இந்தியாவின் பலமே சுழற்பந்துவீச்சு தான். சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் இருவருமே எதிரணிக்கு கடும் நெருக்கடி அளிக்க கூடியவர்கள். துபாயும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்பது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளியான செய்தி. வேகப்பந்துவீச்சில் பும்ரா, புவனேஸ்வர் குமார் மற்றும் அறிமுக வீரர் கலில் அகமது உள்ளிட்டோரும் எதிரணிக்கு சவால் அடிக்க கூடியவர்களே. இந்திய அணியின் ஒரே குறையே துபாய் ஆடுகளத்தில் இந்திய வீரர்களுக்கு அவ்வளவு பரிட்சையம் இல்லை.  கோலி இல்லாமல் இந்திய அணி என்ன செய்யும் என்பதற்கு விடை இந்த தொடரில் ரசிகர்களுக்கு கிடைக்கும். 

ஆசிய கோப்பை- பாகிஸ்தான் ஒரு பார்வை
2018 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு கடும் போட்டி அளிக்கக் கூடிய அணியாக கருதப்படுவது பாகிஸ்தான் மட்டுமே. கடந்த கால பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் பலமாக இருக்கும், பேட்டிங் மோசமாக இருக்கும். இல்லையேனில் இரண்டுமே மோசமாக இருக்கும். ஆனால், இந்த நிலையை மாற்றிய பெருமை பாகிஸ்தான் கேப்டன் SARFARAZ AHAMED க்கே சேரும்.. பந்துவீச்சில் அசுர பலத்துடன் இருக்கும் பாகிஸ்தான் அணி, இம்முறை பேட்டிங்கிலும் வலுவாக கருதப்படுகிறது. சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியாவை வீழ்த்தியதில் இருந்தே அந்த அணிக்கு தனி உத்வேகம் பிறந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது. பாகிஸ்தான் அணியின் முக்கியமான வீரர்களை தற்போது காணலாம். அந்த அணியின் பலமே வேகப்பந்துவீச்சு தான். MOHAMMED AMIR, HASAN ALI, AFRIDI, மற்றும் JUNAID KHAN ஆகியோர் எதிரணியை மிரட்டக் கூடியவர்கள். போட்டி துபாயில் நடப்பதால் சுழற்பந்துவீச்சு மிகவும் முக்கியம். அந்த குறையை போக்க  SHADAB KHAN உள்ளார். பேட்டிங்கில் அந்த அணிக்கு வலு சேப்பது FAKHAR ZAMAN BABAR AZAM, IMAM UL HAQ. SHOIB MALIK.மற்றும் கேப்டன் சSARFARAZ AHAMED தான். இந்த பேட்டிங் வரிசை எதிரணி பந்துவீச்சை ஒரு அளவிற்கு எதிர்கொள்ளும் வல்லமை பெற்றதே. ஆனால் பாகிஸ்தானின் மிகப் பெரிய குறையே, அந்த அணியை கணிக்க முடியாது.. ஆம் அந்த அணி எப்போது வெற்றி பெறும், எப்போது தோல்வி அடையும் என தெரியாது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் தன்மை அந்த அணிக்கு இல்லை.  துபாயில் விளையாடிய அனுபவம் பாகிஸ்தானுக்கு இருந்தாலும், அங்கு சோதப்பலான ஆட்டத்தையே பாகிஸ்தான் வெளிப்படுத்தியிள்ளது. ஆசிய போட்டியில் பாகிஸ்தான் இதுவரை  44 போட்டிகளில் விளையாடி 26 போட்டிகளில் வெற்றி, 17 போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது. 

மறக்க முடியாத 2014 - ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின ஆட்டம், ரசிகர்களை சீட்டு இருக்கை நுணிக்கு கொண்டு சென்றது. வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர் தவான் 10 ரன்களிலும், கோலி 5 ரன்களிலும், வெளியேற, அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா அரைசதம் விளாசி ஆட்டமிழந்தார். ரஹானே 50 பந்துகள எதிர்கொண்டு 23 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் இந்தியாவை சரிவை நோக்கி சென்றது. தோனி இல்லாதததால், அது இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்தது. இருப்பினும் அம்பத்தி ராயுடு மற்றும் ஜடேஜா அடுத்தடுத்து அரைசதம் விளாச இந்தியா,  8 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் என்ற ஸ்கோரை எட்டியது. 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் விக்கெட்டுக்கு 71 ரன் சேர்த்தாங்க. பாகிஸ்தான் வலுவாக இருந்த நிலையில், அகமது சேஷாத், மிஸ்பா உல் ஹக், உமர் அக்மல் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க பாகிஸ்தான் சரிவை நோக்கிசென்றது. இருப்பினும் முகமது ஹபிஸ் நிதானமாக விளையாடி 75 ரன்கள் சேர்க்க, பாகிஸ்தான் 200 ரன்களை தொட்டது.  சாயப் மஸ்குட் ரன் அவுட் அக பாகிஸ்தான் தோல்வியை நோக்கி சென்றது. ஒரு கட்டத்தில் 9 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தடுமாறியது. இருப்பினும் யாரும் எதிர்பார்க்காத வகையில் அப்ரிடி அதிரடியாக விளையாடி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி திரில் வெற்றி பெற்றது. 




Next Story

மேலும் செய்திகள்