விளையாட்டு திருவிழா - 12.09.2018 - கடைசி டெஸ்ட்டில் இந்தியா தோல்வி - ராகுல், பந்த் ஆகியோரின் சதம் வீண் ; பேட்ஸ்மேனாக வெற்றி பெற்ற கோலி

விளையாட்டு திருவிழா - 12.09.2018 - டென்னிஸ் வீராங்கனை செரினா குறித்து கேலி சித்திரம் - நிறவெறியை தூண்டும் சித்திரம் என எதிர்ப்பு
விளையாட்டு திருவிழா - 12.09.2018 - கடைசி டெஸ்ட்டில் இந்தியா தோல்வி - ராகுல், பந்த் ஆகியோரின் சதம் வீண் ; பேட்ஸ்மேனாக வெற்றி பெற்ற கோலி
x
விளையாட்டு திருவிழா - 12.09.2018

கடைசி டெஸ்ட்டில் இந்தியா தோல்வி - ராகுல், பந்த் ஆகியோரின் சதம் வீண் ; பேட்ஸ்மேனாக வெற்றி பெற்ற கோலி
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட்டில் இங்கிலாந்து 332 ரன்களும், இந்தியா 292 ரன்களும் எடுத்தன. 40 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி, 2வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்கள் சேர்த்தது. 464 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தவான், கோலி, புஜாரா, ரஹானே, ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணியில் தோல்வி உறுதியானது. இந்த நிலையில் தான் ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல் , ரிஷப் பந்த் தங்களது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணி ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தனர். ஒருநாள் போட்டி பாணியில் விளையாடிய இந்த ஜோடி அடுத்தடுத்து சதம் விளாசினர். ஒரு கட்டத்தில் இந்தியா டிரா செய்யுமா என்று எதிர்பார்த்த ரசிகர்கள், இவர்கள் ஆட்டத்தை பார்த்து வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையாக இருந்தனர். 5 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் என்ற ஸ்கோரில் சேர்ந்த இந்த ஜோடி அணியின் ஸ்கோரை 325 வரை உயர்த்தியது. இந்த நிலையில் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. 149 ரன்கள் எடுத்த போது ரஷித் பந்துவீச்சில் கே.எல். ராகுல் போல்ட் ஆகினார். இவரை தொடர்ந்து தேவையில்லாத ஷாட் ஆடி ரிஷப் பந்த்தும் ஆட்டமிழக்க, இந்திய ரசிகர்களின் நம்பிக்கை சுக்கு நூறாக உடைந்தது. ஆட்டத்தை ஜடேஜா சமன் செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில், அவரும் பெவிலியன் திரும்ப, இந்தியாவின் தோல்வி தவிர்க்க முடியாமல் போய் விட்டது. இந்திய அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக நடந்த ஒரே விஷயம்,  கே.எல்.ராகுல், ரிஷப் பந்த்தின் ஆட்டம் மட்டும் தான். இங்கிலாந்து ரசிகர்களிடமிருந்து கண்ணீர் மல்க ஆட்டநாயகன் விருதுடன் குக் விடைபெற்றார்.இங்கிலாந்து மண்ணில் ஆட தெரியாது என்று கேலி பேசியவர்களுக்கு தொடர் நாயகன் விருது மூலம் கோலி பதில் அளித்தார். மேலும், டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஆண்டர்சன் படைத்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் - இந்திய வீரர்களின் செயல்பாடு எப்படி?
இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் முடிவுற்றது. இந்தப் போட்டியில இந்திய வீரர்கள் செயல்பாட்டுக்கு தகுந்தவாறு எவ்வளவு மதிப்பெண் வழங்கலாம் என்பதை தற்போது காணலாம். இந்திய பேட்ஸ்மேன்கள் அதிக மதிப்பெண்  வாங்கி முதலிடத்தில் இருப்பது  கேப்டன் விராட் கோலி தான்.  593 ரன்கள் குவித்த அவர் 10க்கு 7 மதிப்பெண்கள் வாங்கி உள்ளார். 3 மதிப்பெண் எதில்  கேப்டனா விராட் கோலி கோட்டை விட்டார் என்றால் கேப்டன் பொறுப்பில் தான்.. சரியான அணியை தேர்வு செய்தயாதது,  எதிரணி விக்கெட்டுகளை வீழ்த்த கையாண்ட உத்தி என கோலி தவறு செய்தார். அடுத்த இடத்தில் இருப்பது புஜாரா, 10க்கு 5 மதிப்பெண்கள் வாங்கியுள்ள புஜாரா 4 போட்டிகளில் 278 ரன்கள் சேர்த்தார். புஜாரா சதம் விளாசி இருந்தாலும், மற்ற 3 போட்டிகளிலும் ரன் சேர்க்க அவர் தவறிவிட்டார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுலும், 10க்கு 5 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 5 போட்டிகளில் 299 ரன்கள் சேர்த்துள்ள ராகுல், கடைசி போட்டியில் சதம் விளாசினார். பேட்டிங்கை தவிர கே.எல். ராகுல், ஸ்லிப் கேட்சை பிராமதமாக பிடித்து அசத்தினார். 4வது இடத்தில் இருப்பது ரஹானே. அவர் வாங்கிய மதிப்பெண் 10க்கு வெறும் 3 தான். பேட்டிங்கில்பெரிதும் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 5 போட்டியில் வெறும் 257 ரன்கள் தான் சேர்த்துள்ளார். கடைசி இடத்தில் இருப்பது தவான் தான்.  10 க்கு தவான் 2 மதிப்பெண்கள் தான் பெற்றுள்ளார். 4 போட்டிகளில் விளையாடி 162 ரன்கள் மட்டும் தான் தவான் சேர்த்துள்ளார்.  இந்த தொடரின் மூலம் இனி தவானின் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கே திரும்ப முடியாது என்று நிலை ஏற்பட்டுள்ளது. 

கிலிஃப் டைவிங் என்றால் என்ன? - உயிரை பணயம் வைத்து சாகசம்
CLIF DIVING...  உச்சியிலிருந்து தண்ணீருக்குள் டைவ் அடிப்பதே இந்த விளையாட்டாகும். குறிப்பிட்ட உயரத்தில் நிற்கும் வீரர்கள் , தண்ணீரில் குதிக்கும் போது , உருண்டு கொண்டே விழுவார்கள். வீரர்கள் குதிக்கும் போது எந்தளவிற்கு சாகசம் மேற்கொள்கிறார்களோ, அத்ன் அடிப்படையில் நடுவர்கள் புள்ளிகளை வழங்குவார்கள். இதனை அடிப்படையாக வைத்தே வெற்றியாளர்களை தேர்வு செய்வார்கள். குதிக்கும் போது கொஞ்சம் குறித் தவறினாலோ,  உயிர் நமது கையில் இல்லை. இந்த விளையாட்டில் பல விபத்துகளும் நிகழ்ந்து வீரர்கள் உயிரை விட்டுள்ளனர். சாகச அடிப்படையிலான இந்தப் போட்டி ஆண்கள் மட்டும் விளையாடுவதில்லை. பெண்களும் ஆண்களுக்கு நிகராக ஜொலித்து உள்ளனர். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக உள்ள இந்த விளையாட்டு சாகச அடிப்படையில் கொண்டது. சமீபத்தில் போஸ்னியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆடவர் பிரிவில் பிரிட்டன் வீரர் GARY யும், மகளிர் பிரிவில் ஆண்டிரியானா சாம்பியன் பட்டத்தை வென்றனர். 

குரோஷிய அணியை பந்தாடிய ஸ்பெயின் - உலகக் கோப்பையில் ஜொலித்த குரோஷியாவுக்கு பின்னடைவு
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி வரை சென்ற குரோஷிய அணி,  ஐரோப்பிய நேண்னல் லீக் ஆட்டத்தில் படுதோல்வியை  தழுவியது. ஸ்பெயினின் எல்ச்சி நகரில் நடைபெற்ற இப்போட்டியில் குரோஷியாவும், ஸ்பெயினும் மோதின. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி குரோஷிய வீரர்களை ஸ்பெயின் அணியினர் தடுமாற செய்தனர். இறுதியில் ஸ்பெயின் அணி 6க்கு0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. 

டென்னிஸ் வீராங்கனை செரினா குறித்து கேலி சித்திரம் - நிறவெறியை தூண்டும் சித்திரம் என எதிர்ப்பு
நிற வெறியை தூண்டும் விதமாக நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் குறித்து வெளியிடப்பட்டுள்ள கேலி சித்திரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியின் போது நடுவரிடம் செரினா வில்லியம்ஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய செய்தித் தாள் ஒன்று செரினா வில்லியம்ஸ் குறித்து கேலி சித்திரம் வெளியிட்டுள்ளது,. நிற வெறியை தூண்டும் விதமாக இந்த கேலி சித்திரம் அமைந்துள்ளதாக கூறி, உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

ஓய்வு முடிவை அறிவித்தார் சர்தார் சிங்
இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான சர்தார் சிங் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இளம் வீரர்களுக்கு வழிவிட இந்த முடிவை தாம் எடுத்துள்ளதாகவும் சர்தார் சிங் கூறியுள்ளார்.

5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா Vs பாகிஸ்தான் 
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் கால்பந்து ஆட்டத்தில் தற்போது விளையாடி வருகிறது. 5 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகளும் கால்பந்து போட்டியில் விளையாடுகிறது.  இதில் வெற்றி பெறும் அணி தெற்காசிய கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். 



Next Story

மேலும் செய்திகள்