விளையாட்டு திருவிழா 24.08.2018 - 18வது ஆசிய விளையாட்டு போட்டி
பதிவு : ஆகஸ்ட் 24, 2018, 09:13 PM
ஆசியாவின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது.
ஆசியாவின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது.

மகளிர் கபடி இறுதிச் சுற்று : ஈரான் அணியிடம் இந்தியா தோல்வி

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் ஈரான் அணியும், இந்திய அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்திய ஆடவர் அணி அரையிறுதியில் தோல்வியை தழுவிய நிலையில், மகளிர் அணி அதற்கு பழிதீர்க்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இதற்காக மகளிர் அணிக்கு ஆதரவு அளிக்கும் விதமாக இந்திய வீரர்கள் மைதானத்திற்கு நேரில் வந்திருந்தனர். 

முதலில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்த, ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். நேரம் செல்ல செல்ல ஈரான் வீராங்கனைகள் போட்டியின் போக்கை திசை மாற்றினர். இந்திய வீராங்கனைகள் எல்லைக்கு ரைடு வந்த ஈரான் வீரங்கனைகள் புள்ளிகளை குவித்து முன்னிலை பெற்றனர். புள்ளிகளின் வித்தியாசத்தை இந்திய வீராங்கனைகளும் குறைக்க முற்பட ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் ரசிகர்களுக்கு பரபரப்பு ஏகிறியது. இறுதியில் 27க்கு24 என்ற புள்ளி கணக்கில் தோல்வியை தழுவியது.

ஆசிய போட்டி வரலாற்றில் முதல் முறையாகதங்கப் பதக்கம் இல்லாமல் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி நாடு திரும்புகிறது. 

படகு போட்டி : இந்திய அணி தங்கம்

ஆசிய விளையாட்டு போட்டியில் தடுப்பு படகு போட்டியில் ஒரே நாளில் இந்தியா 3 பதக்கத்தை தட்டிச் சென்றது.

இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற நான்கு பேர் பங்கேற்கும் துடுப்பு படகு குழு இறுதிச் சுற்றில் இந்தியா தங்கம் வென்றது. இந்திய வீரர்கள் சவர்ன் சிங், தட்டு பாபன், ஓம் பிரகாஷ், சுக்மீத் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, 6. 17 நிமிடங்களில் பந்தய தூரத்தை முதலாவதாக கடந்தது, இது ஆசிய போட்டி துடுப்பு படகு போட்டி வரலாற்றிலேயே இந்தியா வெல்லும் 2வது தங்கமாகும்.

தனிநபர் படகு போட்டி : இந்தியாவுக்கு வெண்கலம்

தனிநபர் பிரிவு துடுப்பு படகு போட்டியில் இந்தியாவின் துஷ்யந்த் சவுகான், வெண்கலப் பதக்கம் வென்றார். பதக்கத்திற்காக கடுமையாக போராடியதால், அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. ரத்த அழுத்தம் குறைந்ததால், அவர் போட்டி முடிந்ததும் மயங்கினார். இதனையடுத்து, உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். தனது முழ சக்தியையும் வெளிப்படுத்தி பதக்கம் வென்று, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துஷ்யந்துக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. 

மகளிர் பளுதூக்குதல் : இந்திய வீராங்கனை தோல்வி

ஆசிய போட்டி மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இந்தியா தவறவிட்டது. 63 கிலோ எடைப் பிரிவில் களமிறங்கிய இந்தியாவின் ராக்கி, 3 வாய்ப்புகளிலும் சுமையை தூக்க தவறினார். இதனால் பதுக்கம் வெல்லும் வாய்ப்பு பறிப்போனது.

வில்வித்தை இந்தியா தோல்வி

ஆசிய போட்டி வில்வித்தை காம்பவுண்ட் குழு பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் ஈரான் அணியிடம் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது.  விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் 155-க்கு 153 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா அணி தோற்றது. இதன் மூலம் இந்தியாவின் பதக்க வாய்ப்பு பறிப்போனது.

தொடர்புடைய நிகழ்ச்சிகள்

விளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஒருநாள் கிரிக்கெட் நாளை தொடக்கம் : டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்க்குமா ஆஸி?

விளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் விளையாட பி.சி.சி.ஐ. தடை

70 views

ஒரே தேசம் - 04.08.2018

ஒரே தேசம் - 04.08.2018 நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.

249 views

7 1/2 - 08.05.2018

7 1/2 - 08.05.2018

112 views

சொல்லிஅடி - 07.05.2018

சொல்லிஅடி - 07.05.2018

61 views

ராஜபாட்டை 06.05.2018 ரஜினி காட்டிய பெருந்தன்மை - விவரிக்கிறார் குஷ்பு

ராஜபாட்டை 06.05.2018 ரஜினி காட்டிய பெருந்தன்மை - விவரிக்கிறார் குஷ்பு

56 views

யாதும் ஊரே - 06.05.2018 கடந்த வார உலகச் செய்திகளின் சுவாரஸ்ய தொகுப்பு

யாதும் ஊரே - 06.05.2018 கடந்த வார உலகச் செய்திகளின் சுவாரஸ்ய தொகுப்பு

96 views

பிற நிகழ்ச்சிகள்

விளையாட்டு திருவிழா - (14.01.2019) : இந்தியா ஆஸி நாளை 2வது ஒருநாள் போட்டி

விளையாட்டு திருவிழா - (14.01.2019) : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்

100 views

விளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஒருநாள் கிரிக்கெட் நாளை தொடக்கம் : டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்க்குமா ஆஸி?

விளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் விளையாட பி.சி.சி.ஐ. தடை

70 views

விளையாட்டு திருவிழா - (10.01.2019) : இந்தியா Vs ஆஸி. ஒருநாள் போட்டி : நாளை மறுநாள் சிட்னியில் தொடக்கம்

விளையாட்டு திருவிழா - (10.01.2019) : ஆசிய கோப்பை கால்பந்து தொடர்: இந்தியா Vs யு.ஏ.இ. இன்று மோதல்

41 views

விளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்திய வீரர்களின் செயல்பாடு எப்படி?

விளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்தியாவிலேயே நடைபெறுகிறது ஐ.பி.எல் போட்டி

44 views

விளையாட்டு திருவிழா - (08.01.2019) : டெஸ்ட் தரவரிசை புஜாராவுக்கு 3வது இடம்

விளையாட்டு திருவிழா - (08.01.2019) : புதிய உச்சம் தொட்ட ரிஷப் பண்ட்

29 views

விளையாட்டு திருவிழா - (07.01.2019) : ஆஸி. மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை

விளையாட்டு திருவிழா - (07.01.2019) : டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.