விளையாட்டு திருவிழா 20.08.2018 - 18வது ஆசிய விளையாட்டு போட்டி

ஆசியாவின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது.
விளையாட்டு திருவிழா 20.08.2018 - 18வது ஆசிய விளையாட்டு போட்டி
x
ஆசியாவின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது.

இந்திய வீரர்கள் பதக்க வேட்டை
 
ஆடவருக்கான 65 கிலோ எடைப் பிரிவு மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா தங்கம் வென்றார். விறுவிப்பான இறுதிப் போட்டியில் ஜப்பான் வீரர் டாய்சியை அவர் எதிர்கொண்டார். இரண்டு பாம்புகள்  சண்டையிட்டது போல் வீரர்கள் சீறினர். அதில் 11க்கு8 என்ற புள்ளி கணக்கில் பஜ்ரங் பூனியா தங்கம் வென்றார். நட்சத்திர மல்யுத்த வீரர் யோகேஸ்வர் தத் தான் இவரது குரு என்பது கூடுதல் தகவல்

ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் இந்திய வீரர் தீபக் குமார் வெள்ளி வென்றார். இந்திய விமானப்படையை சேர்ந்த தீபக் குமார், இறுதிப் போட்டியில் 
247 புள்ளி 7 புள்ளி வென்று வெள்ளி வென்றார். இந்தப் பிரிவில் களமிறங்கிய மற்றொரு இந்திய வீரர் ரவிக்குமார் 4வது இடத்தை பிடித்து பதக்கத்தை தவறவிட்டார்.

மல்யுத்த ஜாம்பவான் சுஷில் குமார் தோல்வி : முடிவுக்கு வருகிறதா மல்யுத்த சகாப்தம்?

இந்தியாவின் மல்யுத்த ஜாம்பவான் சுஷில் குமார். 2 முறை ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பெருமைக்குரியவர். காயம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக போட்டியில் களமிறங்காத சுஷில் குமார், காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார். பல்வேறு சாதனைகளை படைத்த சுஷில் குமார் ஆசிய போட்டியில் பதக்கம் வென்றதில்லை. தன்னுடைய கனவை நினைவாக்க களமிறங்கிய அவர் 74 கிலோ எடைப் பிரிவில் பகரைன் வீரர் ADAM BAITROV-ஐ சுஷில் குமார் எதிர்கொண்டார். யாரும் எதிர்பாராத வகையில் அவர் தோல்விய தழுவ தொடரிலிருந்து வெளியேறினார்.

35 வயதான சுஷில் குமார் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது இந்த தோல்வியின் மூலம் மல்யுத்த போட்டியிலிருந்த சுஷில் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் , ஓய்வு பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார். கடின பயிற்சி மேற்கொண்டு தோல்வியிலிருந்து மீண்டு வருவேன் என்றும் சுஷில் குமார் கூறினார். சர்வதேச அளவில் போட்டியில் பங்கேற்காமல் இருந்தததே தமது தோல்விக்கு காரணம் என்றும் சுஷில் குமார் குறிப்பிட்டார். 

வெள்ளத்தில் குடும்பத்தை இழந்த கேரள வீரர் சாதனை

சஜன் பிரகாஷ், கேரளாவை சேர்ந்த நீச்சல் வீரரான இவர் 32 ஆண்டுகளுக்கு பிறகு 200 மீட்டர் பட்டர்பிளே நீச்சல் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். 24 வயதான சஜனுக்கு போட்டி தொடங்குவதற்கு இரவு முன்பு தான் ஒரு அதிர்ச்சி தகவல் வந்து சேர்ந்தது.கேரளாவை சேர்ந்த இவரது தாத்தா, மாமா என 5 குடும்ப உறுப்பனரும் வெள்ளத்தில் காணாமல் போனார்கள் என்பது தான். 

மேலும் இடுக்கியில் உள்ள சாஜனின் வீடும், உடமைகளும் வெள்ளத்தில் கடும் சேதமடைந்தது. இத்தனை சோகத்தையும் தாண்டி போட்டியில் பங்கேற்ற சாஜன், தேசிய அளவில் புதிய சாதனை படைத்ததோடு, இறுதிச் சுற்றில் 5வது இடத்தை பிடித்தார். குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பால் தான் சாஜன் பிரகாஷ்ல் பதக்கம் வெல்ல முடியவில்லை என்று அவரது பயிற்சியாளர் கூறியுள்ளார்.

கபடி லீக் சுற்று : இந்திய ஆடவர் அணி அதிர்ச்சி தோல்வி

ஆசிய போட்டி  ஆடவர் கபடி பிரிவின் லீக் சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய அணி அதிர்ச்சி தோல்வியை தழுவியது. 3வது லீக் ஆட்டத்தில் தென் கொரியாவை எதிர்கொண்ட இந்திய அணி 24க்கு23 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியை தழுவியது.

மகளிர் குழு பேட்மிண்டன் காலிறுதி சுற்று : ஜப்பானிடம் வீழ்ந்தது இந்திய அணி

ஆசிய போட்டி பேட்மிண்டன் மகளிர் குழு பிரிவில் காலிறுதி சுற்றில் இந்திய அணி ஜப்பானிடம் 3க்கு1 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. ஒற்றையர் பிரிவில் பி.வி. சிந்து மட்டும் வெற்றி பெற, சாய்னா நேவால் போராடி தோல்வியை தழுவினார். இரட்டையர் பிரிவில் பி.வி.சிந்து, அஸ்வினி Ponappa ஜோடி தோல்வியை தழுவியது. இதனால் 3க்கு1 என்ற கணக்கில் தோல்வியை தழுவிய இந்திய மகளிர் அணி பதக்கத்தை தவறவிட்டது. 

உலக சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டி

தஹிதி தீவில் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான உலக சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரேசில் நாட்டை சேர்ந்த கேப்ரியல் மெடினா பட்டத்தை கைப்பற்றினார். ஆஸ்திரேலிய வீரர் ஓவன் ரைட்டை தோற்கடித்தார். இந்த தொடரில் கேப்ரியல் பட்டத்தை கைப்பற்றுவது இதுவே முதல் முறை. 

சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஜோகோவிச் கைப்பற்றினார். அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்ற போட்டியின் இறுதிச் சுற்றில் ரோஜர் பெடரரை எதிர் கொண்ட ஜோகோவிச் 6 க்கு 4, 6 க்கு 4  என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். கோப்பையை வெல்ல அனுமதி அளித்ததற்கு பெடரரிடம் நன்றி தெரிவிப்பதாக வெற்றிக்கு பிறகு, ஜோகோவிச் கூறினார்.





Next Story

மேலும் செய்திகள்