பிரேசில் Vs மெக்சிகோ இன்று மோதல்

5 முறை உலக சாம்பியனான பிரேசில், மெக்சிகோவுடன் மோத உள்ளது
பிரேசில் Vs மெக்சிகோ இன்று மோதல்
x
பிரேசில் Vs மெக்சிகோ இன்று மோதல்

5 முறை உலக சாம்பியனான பிரேசில், மெக்சிகோவுடன் மோத உள்ளது.ரவுண்ட் ஆப் 16 சுற்றில் பிரேசில் அணி 28 ஆண்டுகளாக தோல்வி அடைந்ததில்லை.பிரேசில் அணி கடந்த 14 போட்டிகளில் வெறும் 3 கோல்களை மட்டும் தான் எதிரணிக்கு விட்டுக் கொடுத்தது.பிரேசில் அணியின் முக்கிய வீரர்கள் நெய்மார் மற்றும் சில்வா தான்..மெக்சிகோவை பொறுத்தவரைக்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. தென் கெரியாவை 2வது போட்டியில் வீழ்த்தினாலும், மூன்றாவது ஆட்டத்தில் சுவிடனிடம் தோல்வியை தழுவிடுச்சி.மெக்சிகோ அணியின் முக்கிய பலமாக HERNANDEZ கருதப்படுகிறார்.இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை மோதியுள்ளனர். இதில் பிரேசில் 3 முறை வெற்றி பெற்று இருக்கு.. ஒரு போட்டி டிரா ஆயிருக்கு.

பெல்ஜியம்  Vs ஜப்பான் இன்று பலப்பரீட்சை

இரவு 11.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பலம் வாய்ந்த பெல்ஜியம் அணி, ஜப்பானுடன் மோதுகிறது.அசுர பலத்துடன் உள்ள பெல்ஜியம் அணி, இந்த தொடரில் அதிக கோல் அடிச்ச அணி என்ற பெருமையை பெற்று இருக்கு..உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் பெல்ஜியம் 10 போட்டியில் விளையாடி 43 கோல்கள் அடித்துள்ளது.பெல்ஜியம் அணியின் நட்சத்திர வீரர்கள் EDEN HAZARD, LUKAKU உள்ளிட்டோர் எதிரணிக்கு கடும் சவால் அளிக்கக் கூடியவர்கள். நடப்பு தொடரில் நாக் அவுட் சுற்றில் களமிறங்கும் ஒரே ஆசிய அணி ஜப்பான் மட்டும் தான். முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த கொலம்பியாவை வீழ்த்தி, செனகலோ டிரா செய்து, பொலந்துவிடம் தோல்வியை தழுவியது. பெல்ஜியம், ஜப்பான் அணிகள் இதுவரை ஒரு முறை மோதியுள்ளன.  2002ஆம் ஆண்டு உலகக் கோப்பை லீக் சுற்றில் மோதியிருக்கு. அதில் இரண்டு அணிகளுமே தலா 2 கோல் அடிச்சி இருக்கு.. போட்டியை டிரா செய்துள்ளது. 





 


Next Story

மேலும் செய்திகள்