முதல் வெற்றியை பதிவு செய்த ஜெர்மனி

சுவிடனுக்கு எதிரான ஆட்டத்தில் திரில் வெற்றி
முதல் வெற்றியை பதிவு செய்த ஜெர்மனி
x
உலகக் கோப்பை பெல்ஜியம் அதிரடி வெற்றி

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ரிசிகர்களை உற்சாகத்தில் ஆழத்தியது பெல்ஜியம், துனிசியா மோதின போட்டி தான்..

ரெட் டேவில்ஸ் என்று அழைக்கப்படும் பெல்ஜியம் அணி இந்தப் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினாங்க.

ஆட்டத்தோட 6வது நிமிடத்தில கிடைத்த பெனால்டி வாய்பை பெல்ஜியம் வீரர் EDEN HAZARD கோலாக மாற்றினார். 

இதனால் துனிசியா வீரர்கள் சோர்வை அடஞ்சாங்க. இதை பயன்படுத்திக் கொண்ட பெல்ஜியம் வீரர் லுகாக்கு 16வது நிமிடத்தில் கோல்ல அடிக்க பெல்ஜியம் ஸ்கோர் 2க்கு0 ஆனது. 

இதுக்கு மேல் பொறுமையா இருக்க கூடாதுனு நினைச்ச துனிசியா வீரர்கள், 18வது நிமிடத்தில் பதிலடி கொடுத்தாங்க..

பெல்ஜியம் வீரர்கள் HECTOR. WITSEL கோல் அடிக்க வாய்ப்பை தவறவிட்டாங்க. இருப்பினும் ஆட்டத்தின் முதல் பாதியில் கூடுதல் நிமிடத்தில் லுகாக்கு கோல் அடிக்க, பெல்ஜியம் கோல் எண்ணிக்கை 3ஆக உயர்ந்தது.

இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் இரண்டு கோல் அடித்த 5வது பெல்ஜியம் வீரர் என்ற பெருமையை லூகாக்கு பெற்றார். கடந்த 11 போட்டிய்ல மட்டும் லூகாக்கு 17 கோல் அடிச்சி இருக்காரு.

ஆட்டத்தோட 51வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் EDEN HAZARD 2வது கோல் அடித்தார். அதுக்கு அப்புறம் போட்டியோட 90வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் SUBSTITUTE வீரர் மிச்சி கோல் அடிக்க பெல்ஜியம் கோல் எண்ணிக்கை 5ஆக உயர்ந்தது. ஆட்டதோட கூடுதல் நிமிடத்தில் துனிசியா வீரர் வாகாபி ஆறுதலுக்கு ஒரு கோல் அடிக்க, இறுதியில் பெல்ஜிய்ம 5க்கு 2 என்ற கோல் கணக்கில் வென்று நாக் அவுட் சுற்றுக்கு பெல்ஜியம் தகுதி பெற்றது. 

முதல் வெற்றியை பதிவு செய்த ஜெர்மனி
ஜெர்மனி, சுவிடன் அணிகள் மோதிய போட்டி ரசிகர்களை இருக்கை நுணிக்கு கொண்டு வந்தது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி தோல்வி அடைந்ததால், இந்த ஆட்டத்தில் வென்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்கியது.

ஆட்டத்தின் முதல் 5 நிமிடத்திலே ஜெர்மனி 2 கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது. சுவிடன் வீரர்ககள் ஆக்கோரஷமா விளையாடியதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 

போட்டியின் 32வது நிமிடத்தில் சுவிடன் அணியின் OLA TOIVENEN முதல் கோல் அடிச்சி, ஜெர்மனி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். கிளசென் ஏற்படுத்தி தந்த வாய்ப்பை அவர் அழகாக கோலா மாத்தினார். 

போட்டியின் போது சுவீடன் வீரர் கால் பட்டு ஜெர்மனியின் ரூடிக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் அவர் போட்டியிலிருந்து வெளியேறினார். 

ஆட்டத்தோட பிற்பாதியின் 3வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் மார்கோ ரியஸ், கோல் அடிக்க ஸ்கோர் சமனானது. 

இதுக்கு அப்புறம் ஜெர்மனி வீரர்கள் கோல் அடிக்க பல முறை முயன்றனர். குறிப்பா 88வது நிமிடத்தில் ஜெப்மனி வீரர் அடிச்ச பால், ஸ்வீடன் கோல் கீப்பர் ராபின் அபாரமாக தடுத்தார். 

இரு அணிகளும் 1க்கு1 என்ற கோல் கணக்கில் இருந்த நிலையில், ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் ஜெர்மனிக்கு ஒரு ஃபிரி கீக் வாய்ப்பு கிடைச்சது. அத பயன்படுத்தி ஜெர்மனியின் நட்சத்திர வீரர் டோனி குரூஸ் அபாரமா கோல் அடிக்க, ஜெர்மனி 2க்கு1 என்ற கணக்கில் திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை ஜெர்மனி தக்க வைத்து கொண்டது. 

பனாமாவை பந்தாடிய இங்கிலாந்து அணி
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டியில் இங்கிலாந்து அணி பனாமாவை வீழ்த்தியது.
ரஷ்யாவின் நோவாகிராட் பகுதியில் நடைபெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினர். ஆட்டத்தின் 8ஆவது நிமிடத்திலே இங்கிலாந்து வீரர் ஸ்டோன்ஸ் கோல் அடித்தார். இதே போன்று இங்கிலாந்து அணி கேப்டன் HARY KANE 22 மற்றும் 45வது நிமிடங்களில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார். இதே போன்று 62ஆவது நிமிடத்தில் ஹாட்ரிக் கோலை இங்கிலாந்து அணி கேப்டன் கேன் பதிவு செய்தார். இதன் மூலம் உலக கோப்பை போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்த மூன்றாவது இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை ஹாரி கேன் படைத்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 6-க்கு 1 என்ற கோல் கணக்கில் பனாமாவை வீழ்த்தியது. உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி அதிக கோல் அடித்தது இதுவே முதல் முறை ஆகும்.








Next Story

மேலும் செய்திகள்