சூடு பிடித்தது அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் : வேட்பாளர்கள் டிரம்ப் - ஜோ பிடன் நேருக்குநேர் விவாதம்(தமிழில்)
பதிவு : செப்டம்பர் 30, 2020, 09:32 AM
மாற்றம் : செப்டம்பர் 30, 2020, 02:50 PM
அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் வேட்பாளர்களான அதிபர் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையே நேருக்கு நேர் காரசார விவாதம் நடைபெற்றது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ள குடியரசு கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனும் நேருக்கு நேராக தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றனர். 
அப்போது பேசிய அதிபர் டிரம்ப், உச்சநீதிமன்ற நீதிபதியாக எமிபேரட்டை பரிந்துரை செய்ய தனக்கு முழு அதிகாரம் இருக்கிறது என்றார். 
மக்களுக்கு சிறந்த மருத்துவ காப்பீடு தர தான் நினைப்பதாகவும், 47 வருடங்களில் செய்யாததை 47 மாதத்தில் செய்து விட்டேன் என்றும் டிரம்ப் பெருமிதம் தெரிவித்தார். சில வாரங்களில் கொரோனா தடுப்பு மருந்து வர வாய்ப்பு உள்ளது என்றும் டிரம்ப் கூறினார். அப்போது பேசிய ஜோ பிடன், தேர்தல் பணி ஆரம்பித்த பின் நீதிபதிகளை நியமிப்பதா எனக் கேள்வி எழுப்பினார். பொருளாதாரத்தை எந்த அளவுக்கு சிதைக்க முடியுமோ அந்த அளவுக்கு டிரம்ப் சிதைத்து விட்டார் என்ற ஜோ பிடன், தடுப்பூசி பற்றி டிரம்புக்கு எதுவும் தெரியாது என்றார். அமெரிக்க தேர்தல் வரலாற்றில் அதிபர் வேட்பாளர்கள் இருவரும் நேரடியாக விவாதிப்பது என்பது தொடர்ந்து கடைபிடிக்கப்படும் நடைமுறையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய நிகழ்ச்சிகள்

சித்ரா நடித்த "கால்ஸ்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் - முதல் படமே கடைசி படமான சோகம்

சமீபத்தில் தற்கொலை செய்த சின்னத்திரை நடிகை சித்ரா நடித்துள்ள "கால்ஸ்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

404 views

ஜாக்கிசானின் "வாங்கார்ட்" பட டிரெய்லர் - நடிகர் மாதவன் வெளியீடு

ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானின் வாங்கார்ட் படத்தின் டிரெய்லரை நடிகர் மாதவன் வெளியிடுகிறார்.

62 views

பிற நிகழ்ச்சிகள்

உதட்டுச் சாயம் பொருத்தமானதா? - கண்டறியும் வகையில் புதிய சாதனம்

பெண்களுக்கான மேக்கப் சாதனங்களில் ஒன்று லிப்ஸ்டிக். இந்த லிப்ஸ்டிக் நிறம் பொருத்தமானது தானா என்பதை அறிய அதி நவீன தொழில்நுட்பத்தில் Lipsticj pod ஒன்றை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

10 views

மின்சார பயன்பாடு சிக்கனம் - வருமானம் ஈட்ட பயன்படும் மின்சார கார்

பிரிட்டனில், மின்சார கார் பயன்பாட்டை லாபகரமாக மாற்றுவது எப்படி என்பது குறித்து பரிசோதனை முயற்சி நடைபெற்று வருகிறது. அதனை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....

18 views

சிக்னல் செயலி பதிவிறக்கம் அதிகரிப்பு - 5 நாட்களில் 23 லட்சம் பேர் தரவிறக்கம்

இந்தியாவில் சிக்னல் மற்றும் டெலிகிராம் செயலியை தரவிறக்கம் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

80 views

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் - பரிசோதனை செய்யப்பட்ட ராக்கெட் இன்ஜின்

நாசாவின் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் பயன்படுத்தப்பட உள்ள ராக்கெட் இன்ஜின்களை நாசா விஞ்ஞானிகள் பரிசோதனை செய்து உள்ளனர்.

89 views

வெள்ளை மாளிகையில் முக்கிய பொறுப்பு - இந்திய வம்சாவளி பெண்ணுக்கு வாய்ப்பு

வெள்ளை மாளிகையின் தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குநராக காஷ்மீரை பூர்வீகமாக கொண்ட சமீரா பசிலியை ஜோ பைடன் - கமலா ஹாரிஸ் கூட்டாக நியமனம் செய்துள்ளனர்.

14 views

பிரான்சில் கடும் பனிப் பொழிவு - மழைபோல் கொட்டிய பனி

ஐரோப்பிய நாடான பிரான்சில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. தலைநகர் பாரிஸில் மழைபோல் பனி கொட்டியது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.