"அய்யய்யோ.. இனி எப்படி ரீல்ஸ் போடுறது?".. இளம்பெண்களை கதறவிட்ட இன்ஸ்டாவின் புது அப்டேட்
பெயருக்கு பின்னால் ஸ்வீட்டி, ப்யூட்டி என்ற அடைமொழியுடன்.. ஃபில்டரில் கடைந்தெடுத்த இமேஜை ப்ரொபைலாக வைத்து வலம் வருபவர்களுக்குதான் ஷாக் கொடுத்திருக்கிறது மெட்டா...
பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் நோ ஃபில்டர் - மெட்டா அறிவிப்பு
இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் அழகை அதிகரித்தும் காட்டும் பில்டர் வசதிகள், அடுத்தாண்டு ஜனவரி முதல் நீக்கப்படும் என மெட்டா அறிவித்திருக்கிறது..
இதற்கான காரணமாக மெட்டா தெரிவித்திருப்பதுதான் ஹைலைட்...
உண்மைக்கு மாறான தோற்றத்தை பார்க்கும் போது, இளம் பெண்களுக்கு உடல் அமைப்பு குறித்தான மன அழுத்தம் அதிகரிப்பதால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது...
இந்த அறிவிப்பு சிலருக்கு வருத்தத்தை கொடுத்திருக்கும் நிலையில்... பலர் இதனை வரவேற்று "say no to filters.. எதுவும் அழகே" என்ற ஹேஸ்டேக்கை வைரலாக்கி வருகின்றனர்...