"கொடூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்" - ஐநா உலக உணவுத் திட்ட நிர்வாக இயக்குநர் தகவல்

உலகளாவிய உணவு நெருக்கடி புறக்கணிக்கப்பட்டால் கொடூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
x
"கொடூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்" - ஐநா உலக உணவுத் திட்ட நிர்வாக இயக்குநர் தகவல்

உலகளாவிய உணவு நெருக்கடி புறக்கணிக்கப்பட்டால் கொடூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பு ஏற்கனவே இருந்த உணவு நெருக்கடியில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் நிர்வாக இயக்குநர், டேவிட் பீஸ்லி தெரிவித்துள்ளார். கடந்த நான்கைந்து ஆண்டுகளில் பட்டினியால் அவதிப்படுவோர் எண்ணிக்கை 8 கோடியில் இருந்து 27 கோடியே 60 லட்சமாக அதிகரித்துள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார். மேலும், ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் உக்ரைனில் அறுவடைக் காலம் வருவதால் துறைமுகங்களை மூடுவது என்பது உலகளாவிய உணவு விநியோகத்தின் மீதான போர் அறிவிப்பைக் குறிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்