மீண்டும் ராஜபக்சே கட்சி ஆட்சி? - இலங்கையில் வெடிக்கும் பதற்றம்

நாடாளுமன்றத்தில் உள்ள பிரதான கட்சிகள், அரசுக்கு ஆதரவு வழங்க மறுத்துவிட்டதால் மறுபடியும் மகிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களுடனேயே ஆட்சி அமையும் நிலை உருவாகியுள்ளது.
x
நாடாளுமன்றத்தில் உள்ள பிரதான கட்சிகள், அரசுக்கு ஆதரவு வழங்க மறுத்துவிட்டதால் மறுபடியும் மகிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களுடனேயே ஆட்சி அமையும் நிலை உருவாகியுள்ளது.   


இலங்கை பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அமைச்சரவை அமைவதில் சிக்கல் நீடிக்கிறது.  நாடாளுமன்றத்தில் தற்போதைய சூழ்நிலையில், மகிந்த ராஜபக்சே கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 106 எம்.பி.க்கள் ஆதரவு உள்ளன. தற்போதைய பிரதமர் ரணில் ஐக்கிய தேசிய கட்சியின் ஒரே எம்.பி. ஆக உள்ளார்.  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இஸ்லாமிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு எம்.பி.க்கள் உள்ளனர். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என பிரதமர் ரணிலுக்கு சபாநாயகர் தவிர 117 எம்.பி.க்கள் ஆதரவு தற்போது உள்ளது.  மகிந்த ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எம்.பி ஒருவர் உயிரிழந்த நிலையில், அவருக்கு பதிலாக புதியவர் அடுத்த வாரம் தேர்வு செய்யப்படுவார்.  இதே போல், ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசுக்கட்சி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு 65 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது.  சுயேட்சையாக 42 எம்.பி.க்கள் உள்ளனர். 10 -க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசுக்கு ஆதரவளிக்க போவதில்லை என அறிவித்துள்ளனர்.  எனவே, மறுபடியும் மகிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களுடனேயே ஆட்சி அமையும் நிலை உருவாகியுள்ளது.   


Next Story

மேலும் செய்திகள்