சிலிண்டர்களை சாலைகளில் வைத்து மக்கள் போராட்டம் - கொழும்புவில் பதற்றம்

இலங்கை தலைநகர் கொழும்புவில் சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக பொது மக்கள் சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
x
இலங்கை தலைநகர் கொழும்புவில் சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக பொது மக்கள் சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தலைநகர் கொழும்புவில் சமையல் எரிவாயு , மண்ணெண்ணெய் , பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வைத்து கொண்டு மக்கள் காத்து கிடக்கின்றனர். பெட்ரோல் பங்குகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலைகளில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடுக்க முயன்ற போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் கொழும்பு நகரின் பல இடங்களில் பதட்டமான சூழல் நிலவிவருகிறது.

Next Story

மேலும் செய்திகள்