மின் கசிவால் மளமளவென பரவிய தீ.. 8 பேர் பலியான சோகம்

ரஷ்யாவின் சைபீரியாவில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...
x
மின் கசிவால் மளமளவென பரவிய தீ.. 8 பேர் பலியான சோகம்

ரஷ்யாவின் சைபீரியாவில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரசோனியாஸ்க் பகுதியில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 500 வீடுகள் எரிந்து சாம்பலாகின. பலத்த காற்றின் காரணமாக தீப்பரவல் தீவிரமாகியது. அருகருகே இருந்த கிராமங்களில் உள்ள வீடுகளுக்கும் மளமளவென தீ பரவியது. இதனால் தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் தாமதமாகின. இந்த விபத்தில் 8 பேர் பலியானதுடன் 17 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்