"உடனே பதவி விலகுங்க.. இல்லைனா...." - இலங்கை மக்கள் எச்சரிக்கை

கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசை பதவி விலக வலியுறுத்தி இலங்கையில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
x
"உடனே பதவி விலகுங்க.. இல்லைனா...." - இலங்கை மக்கள் எச்சரிக்கை

கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசை பதவி விலக வலியுறுத்தி இலங்கையில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அரசுக்கு எதிராக நடைபெறும் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆசிரியர்கள், மாணவர்கள், வங்கி மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் என அனைவரும் ஆதரவு அளித்துள்ளனர். ஒன்றிணைந்த அத்யாவசிய சேவை சங்கம் சார்பில் நடைபெறும் கடையடைப்பு போராட்டத்தில், அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை அரசு பதவி விலகாவிட்டால் வரும் 11ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் தொடர்ந்து கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்