அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் : கண்ணீர் புகை குண்டுவீச்சு - இலங்கையில் பரபரப்பு..!

இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கண்ணீர் புகை குண்டுகள் வீசி கலைக்கப்பட்டுள்ளனர்.
x
இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கண்ணீர் புகை குண்டுகள் வீசி கலைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். இதனால் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால், பலரும் போராடி வருகிறார்கள். இந்நிலையில், கொழும்பு ஜயவர்தனபுர பல்கலை கழகம் அருகே அணி திரண்ட மாணவர்கள், நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்று, தடைகளை தகர்த்து நாடாளுமன்ற வளாகத்திற்கு நுழைய முற்பட்டனர். இதனால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், போராட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்