"வெளிநாடுகளை போல இந்தியாவிலும் மருத்துவ கட்டணம் குறைவாக இருக்க வேண்டும்.." - மாணவர்களின் பெற்றோர்
வெளிநாடுகளில் மருத்துவ படிப்பு கட்டணம் குறைவு இந்தியாவில் அதே கட்டணம் வைத்திருக்கலாம் தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி இருக்க மாட்டோம்
வெளிநாடுகளில் உள்ள மருத்துவ படிப்புக்கான கட்டணத்தை இந்தியாவில் வைத்திருந்தால் தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லை என்று, பெற்றோர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். மதுரை மாவட்டம் வில்லாபுரத்தை சேர்ந்த ரேச்சல் என்ற மாணவி,
உக்ரைனில் உள்ள கராசின் கார்கிவ் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார். உக்ரைனில் போர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன், அவர் மதுரை வந்தார். இந்த நிலையில் உக்ரைனில் இருந்து வரும் மாணவர்களின் எதிர்காலம் மற்றும் மன நலத்தை கருத்தில் கொண்டு, இந்தியாவில் அதே சிலபஸ் மற்றும் கட்டணத்துடன் படிப்பை தொடர பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரேச்சலின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story
