உக்ரைன் விவகாரம் - இந்தியர்களின் உதவிக்காக தொலைபேசி எண்கள் வெளியீடு
உக்ரைனில் உள்ள இந்தியர்கள் உதவிக்காக அவசர கட்டுப்பாட்டு அறை எண்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
உக்ரைனில் உள்ள இந்தியர்கள் உதவிக்காக அவசர கட்டுப்பாட்டு அறை எண்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், உக்ரைனில் வாழும் இந்திய பிரஜைகள் அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், போர் ஏற்படாது என ரஷ்யா அறிவித்துள்ள நிலையிலும், தொடர்ந்து அச்சம் நிலவி வருவதால் இந்திய வெளியுறவு அமைச்சகம் அவசர கட்டுப்பாட்டு அறையை தொடங்கியுள்ளது. உக்ரைனில் வாழும் இந்தியர்கள் தங்கள் நிலை குறித்தும், இருப்பிடம் குறித்தும் இந்திய தூதரகத்தில் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது
Next Story
