இசை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு - பராகுவேயில் பரபரப்பு சம்பவம்
தென் அமெரிக்க நாடான பராகுவேயில் இசைநிகழ்ச்சியின்போது நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
தென் அமெரிக்க நாடான பராகுவேயில் இசைநிகழ்ச்சியின்போது நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். சான் பெர்னாடினோ நகரத்தில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று உள்ளனர். அப்போது, மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த ஒருவரை குறிவைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடி உள்ளார். இந்த சம்பவத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.
Next Story
