குழந்தைகளுக்கு உணவளிக்க சிறுநீரகத்தை விற்கும் பெற்றோர்

ஆப்கானிஸ்தானில் குழந்தைகளுக்கு உணவளிக்க பெற்றோர் சிறுநீரகத்தை விற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
x
ஆப்கானிஸ்தானில் குழந்தைகளுக்கு உணவளிக்க பெற்றோர் சிறுநீரகத்தை விற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

தலிபான்கள் ஆட்சியின் கீழ்வந்த ஆப்கானிஸ்தானில் வறட்சியை அடுத்து கடும் குளிர் ஏற்பட்டுள்ளது. வறட்சியால் இடம்பெயர்ந்த மக்கள் குளிர்காலத்தில் எப்படியாவது தங்களது குழந்தைகளை காப்பாற்றிவிட போராடுகிறார்கள். இதற்காக பலர் தங்களுடைய பெண் குழந்தைகளை விற்று பிற குழந்தைகளுக்கு உணவு வழங்குவதாக கூறுகிறார்கள். இதில் மற்றொரு கொடூரமாக ஹீராட் பிராந்தியத்தில் பெற்றோர் சிறுநீரகத்தை விற்று குழந்தைகளின் பசியாற்றுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய மதிப்பில் 74 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுநீரகம் அங்கு விற்கப்படுவதாகவும், பலர் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று தங்களுடைய சிறுநீரகத்தை வாங்கிக்கொள்ளுமாறு கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற அவலம் அங்கு தொடரும் நிலையில் உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு மனிதநேய உதவிகளை தொடர வேண்டும் என ஐ.நா. கேட்டுக்கொண்டு வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்