"முடிவுக்கு வருகிறது பெருந்தொற்று"

ஐரோப்பியாவில், கொரோனா தொற்று புதிய கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அங்கு பெருந்தொற்று முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய இயக்குனர் ஹென்ஸ் குளூஜ் கூறியுள்ளார்.
x
ஐரோப்பியாவில், கொரோனா தொற்று புதிய கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அங்கு பெருந்தொற்று முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய இயக்குனர் ஹென்ஸ் குளூஜ் கூறியுள்ளார்.  

மார்ச் மாதத்திற்குள் ஐரோப்பியாவில் 60 சதவீத மக்களுக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய இயக்குனர் ஹென்ஸ் குளூஜ் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். 

இந்த அலை முடிவுக்கு வந்த பிறகு, தடுப்பூசிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக பல மாதங்களுக்கு கொரோனா தொற்று மிகக் குறைவாக இருக்கும் என்றார்.

இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்படும் என்றும், ஆனால் அது பெருந்தொற்றாக இல்லாமல், உள்ளூர் அளவில் ஏற்பட்டும் தொற்றாக மாறி விடும் என்றும் கூறினார். 

அமெரிக்காவில் தினசரி கொரோனா தொற்று 3.37 லட்சமாக குறைந்துள்ளது. இது நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது என்று அமெரிக்க அதிபரின் மருத்துவத் துறை ஆலோசகர் ஆன்டொனி பாசி கூறியுள்ளார். 

ஆப்பிரிக்காவில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளதாகவும், கொரோனா மரணங்கள் முதல் முறையாக குறைந்து வருவதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் பிராந்திய அலுவலகம் கூறியுள்ளது. 

வீரியம் மிகுந்த புதிய ரக கொரோனா வைரஸ்கள் உருவானால், அவற்றைக் கட்டுப்படுத்த எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளை தகவமைக்க முடியும் என்று தடுப்பூசிக்களுக்கான ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் தியரி பிரென்ட்ன் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்