ஒமிக்ரான் பரவல் எதிரொலி - சொந்த திருமணத்தை தள்ளிவைத்த பிரதமர்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுமாறு, முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
x
குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுமாறு, முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

திமுக தலைமை நிலையச் செயலாளரான பூச்சி. முருகன் இல்ல திருமண விழா, முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வைத்தார். சென்னை தேனாம்பேட்டையில் அண்ணா அறிவாலயத்துக்கு பின்புறம் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற திருமணத்தில் பேசிய மணமக்களை வாழ்த்திய ஸ்டாலின், சீர்திருத்த திருமணத்தை அங்கீகாரமாக்கியது அண்ணா தலைமையிலான திமுக அரசு என்றார். கொரோனா கட்டுப்பாடு விதிகளுடன் திருமணம் நடந்துள்ளதாக கூறிய முதல்வர் ஸ்டாலின், சிரித்த முகத்துடன் இருக்கும் முருகன், புதிய பொறுப்புக்கு வந்திருப்பதாக வாழ்த்தினார். பின்னர், தமிழகம் முதலிடத்தில் வருவதற்கு பாடுபடுவதாக கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர்சூட்டுங்கள் என மணமக்களை வாழ்த்தி அறிவுறுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்