அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற இந்தியர்கள் கடும் குளிரில் உயிரிழப்பு

கனடா அமெரிக்கா எல்லைப் பகுதியில் ஒரு குழந்தை உள்ளிட்ட நான்கு இந்தியர்கள் மைனஸ் 35 டிகிரி குளிரினால் உயிரிழந்துள்ளனர்.
x
கனடா அமெரிக்கா எல்லைப் பகுதியில் ஒரு குழந்தை உள்ளிட்ட நான்கு இந்தியர்கள் மைனஸ் 35 டிகிரி குளிரினால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் வடக்கே  உள்ள கனடாவிற்கு தற்காலிக விசாவில் செல்லும் இந்தியர்கள் சிலர், கள்ளதனமாக அமெரிக்காவிற்குள் நுழைந்து, சட்டவிரோதமாக அங்கு குடியேறுகின்றனர். வியாழன் அன்று கனடா அமெரிக்கா எல்லையை கால் நடையாக கடக்க முயன்ற ஒரு குஜராத் குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர், மிகக் கடுமையான குளிரினால் இறந்து விட்டதாக, மின்னொஸிட்டா காவல் துறை கூறியுள்ளது. ஒரு ஆண், ஒரு பெண், ஒரு இளைஞர் மற்றும் குழந்தையின் உடல்கள், உறைந்த நிலையில், அமெரிக்க எல்லைக்கு சில மீட்டர் வடக்கே கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்தனர். எல்லைப் பகுதியில் மேலும் ஐந்து பேர் பிடிப்பட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்