ஏமென் மீது சவுதி வான்வழி தாக்குதல் - ஐ.நா பொதுச் செயலாளர் கண்டனம்

வெள்ளியன்று ஏமன் மீது சவுதி அரேபியா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 60 பேர் கொல்லபட்டனர். இதற்கு ஐ.நா சபை பொதுச் செயலாளார் ஆன்ட்டனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஏமென் மீது சவுதி வான்வழி தாக்குதல் - ஐ.நா பொதுச் செயலாளர் கண்டனம்
x
வெள்ளியன்று ஏமன் மீது சவுதி அரேபியா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 60 பேர் கொல்லபட்டனர். இதற்கு ஐ.நா சபை பொதுச் செயலாளார் ஆன்ட்டனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவின் அண்டை நாடான ஏமனில், 2015 முதல் ஈரான் ஆதரவு பெற்ற ஹூத்திகளுக்கும், சவுதி அரேபியாவின் ஆதரவு பெற்ற அரச படைகளுக்கும் இடையே கடுமையான உள்நாட்டுப் போர் தொடர்கிறது. அபு தாபி மீது கடந்த வாரம் ஹூத்திகள் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வெள்ளியன்று, ஏமெனின் சாதா நகரில் உள்ள ஹூத்தி ராணுவ கேந்திரங்கள் மீது சவுதி அரேபியா வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் ஆப்பிரிக்க அகதிகள் உள்ளிட்ட 60 பேர் கொல்லபட்டனர். ஏராளமானவர்கள் காயமடைந்தனர். அபு தாபி மீது ஹூத்திக்கள் நடத்திய ட்ரோன் தாக்குதல் பெரும் தவறு என்று கூறிய ஐ.நா
பொதுச் செயலாளர் ஆன்ட்டனியோ குட்டெரெஸ், பதிலுக்கு ஏமென் நாட்டுப் பொது மக்கள் மீது குண்டு மழை பொழிவதை ஏற்க முடியாது என்று கூறி, சவுதி அரேபியாவிற்கு கண்டனம் தெரிவித்தார்.Next Story

மேலும் செய்திகள்